என்னது..இந்தியில் சூர்யா படத்துக்கு இத்தனை கோடியா..? பலே..பலே..சூர்யா..!
நடிகர் சூர்யா, நடிகை திஷா பதானி.
Suriya 42 Pre Business-சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் பெயரிடப்படாத பிரம்மாண்டமான திரைப்படத்தில் நடித்து வருகிறார். 3D அனிமேஷன் முறையில் எடுக்கப்பட்டு வரும் சூர்யா 42, தமிழ், தெலுங்கு, ஹிந்தி உட்பட பத்து மொழிகளில் வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஞானவேல் ராஜா தயாரிக்கும் இந்த திரைப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பிரபல பாலிவுட் ஹீரோயின் திஷா பதானி நடிக்கிறார். இந்த படத்தில் சூர்யா பலவிடங்களில் தொடர உள்ளதாகவும் கடந்த சிலநாட்களுக்கு முன்னர் செய்திகள் வெளியாகின.
சர்வதேச அளவில் 'ஜெய்பீம்' படம் பேசப்பட்டதற்குப் பின்னர் சூர்யாவின் மார்க்கெட் எகிறிக்கிடக்கிறது. பொதுவாகவே சூர்யா கதைத் தேர்வில் மிகுந்த கவனம் செலுத்துவதுடன் சமூக கருத்துக்களை வலியுறுத்தும் படங்களுக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறார்.
சிறுத்தை சிவாவின் தற்போதைய படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்றது அதன் பின்னர் அந்த படத்திற்கான காட்சிகள் கோவாவிலும் எடுக்கப்பட்டது. அதன் பிறகு சில நாட்கள் மீண்டும் சென்னையில் இப்படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக முடிந்தது. இப்படி பரபரப்பாக படமாக்கப்பட்டு வரும் இந்த படத்தின் மோஷன் போஸ்டர் ரசிகர்களை படு சூப்பராக கவர்ந்த நிலையில் படத்தின் அடுத்தடுத்த அப்டேட்டுகளும் அவர்களை குஷிப்படுத்தி வருகிறது.
அந்த வகையில் தற்போது இந்த படத்தின் இந்தி உரிமை பல கோடிக்கு விற்பனையாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பொதுவாகவே முன்னணி நடிகர்களின் திரைப்படங்களை வாங்குவதில் பல நிறுவனங்களுக்குள் போட்டி இருக்கும். அந்த வகையில் சூர்யா 42 படத்தின் இந்தி சேட்டிலைட், டிஜிட்டல், தியேட்டர் உரிமம் ஆகியவற்றை மொத்தமாக பென் ஸ்டுடியோஸ் நிறுவனம் கைப்பற்றி இருக்கிறது.
அதிலும் அந்த நிறுவனம் சூர்யாவுக்காக 100 கோடி ரூபாயை வாரி இறைத்திருப்பது சூர்யாவின் இந்தி மார்க்கெட் கூட உச்சத்தில் இருப்பதை உறுதிப்படுத்துவதாக அவரது ரசிகர்கள் குஷியடைந்துள்ளனர். பென் நிறுவனம் இவ்வளவு பெரிய தொகையைக் கொடுத்து இந்த உரிமையை பெற்றுள்ளது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது. ஏனெனில், தற்போது சூர்யா சூரரை போற்று திரைப்படத்தின் இந்தி ரீமேக்கை தயாரித்து வருகிறார். ஏற்கனவே தமிழில் சூப்பர் ஹிட் ஆன அந்த திரைப்படத்திற்கு பல தேசிய விருதுகள் கிடைத்தது.
அதைத்தொடர்ந்து தற்போது இந்த படத்தின் ஹிந்தி ரீமேக்கிற்கு உச்சக்கட்ட எதிர்பார்ப்பு இருக்கிறது. இதன் மூலம் சூர்யா இந்தி திரை உலகில் கால் பதிக்கிறார். அதன் காரணமாகவே அவருடைய படத்தின் இந்தி உரிமம் இத்தனை கோடிக்கு விலை போய் உள்ளதாக கூறுகின்றனர், விபரம் அறிந்த வட்டாரங்கள். அந்த வகையில் இதன் மூலம் சூர்யாவுக்கு பாலிவுட்டில் இனிமேல் மவுசு கூடும் என்று அவருடைய ரசிகர்கள் ஆர்ப்பரித்து சமூக வலைத்தளங்களிலும் பரப்பி வருகின்றனர்.
இப்போது கோலிவுட்டில் படு பிஸியாக இருக்கும் சூர்யா, அடுத்ததாக வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார். அதைத் தொடர்ந்து பல முன்னணி இயக்குனர்களின் திரைப்படத்திலும் இவர் நடிக்க இருக்கிறார். அதற்கான அடுத்தடுத்த அறிவிப்புகள் விரைவில் வெளிவர இருப்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu