நடிகையாகும் சூப்பர் சிங்கர் புகழ் பிரியங்கா

நடிகையாகும் சூப்பர் சிங்கர் புகழ் பிரியங்கா
X
சூப்பர் சிங்கர் புகழ் பிரியங்கா மிஷ்கின் இயக்கத்தில் வெளியாகவுள்ள பிசாசு 2 படத்தில் நடிக்கவுள்ளார்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சூப்பர் சிங்கர் மேடையில் தங்களது திறமையை வெளிப்படுத்தினாலே போதும் அவர்களின் பிரகாசமான எதிர்காலம் அமையும். அப்படி இதுவரை பலருக்கு அமைந்துள்ளது, அதை நாமே கண்கூடாக பார்க்கிறோம்.

சூப்பர் நிகழ்ச்சி மூலம் மக்களின் மனதை கவர்ந்து இப்போது மருத்துவராகவும் வலம் வருபவர் பிரியங்கா. சில வருடங்களுக்கு முன்னர் நடந்த விஜய் டிவி-யின் விருது விழாவில் சிறந்த பாடகிக்கான விருதை இசையமைப்பாளர் டி.இமானிடமிருந்து பெற்ற பிரியங்கா, தற்போது பாடகியாகவும், மருத்துவராகவும் கலக்கி வருகிறார்.

பி.டி.எஸ் முடித்த பிரியங்கா தனியா க்ளினிக் ஆரம்பிக்கலாம் என்ற எண்ணத்தில் இருந்தபோது கொரோனா பரவல் காரணமாக அது நிறைவேறாமல் போனது.

பிசாசு 2 படத்துல ஒரு பாட்டும், குதிரைவால் படத்துல ஒரு பாட்டும், அந்தப் படத்தோட ஹீரோயின் அஞ்சலி பாட்டீலுக்கு பின்னணி குரலும் கொடுத்துள்ளார்.

பிரியங்கா இனி நாயகியாக வலம் வரப்போகிறார் என தகவல்கள் வந்துள்ளது. அதாவது மிஷ்கின் இயக்கத்தில் வெளியாகவுள்ள பிசாசு 2 படத்தின் புரொமோஷனுக்காக ஒரு பாடல் படமாக்கப்பட்டுள்ளதாம். அதில் பிரியங்கா பாடியும், நடித்தும் உள்ளதாக கூறப்படுகிறது.

Tags

Next Story
why is ai important to the future