திரைவானில் சூரியன் ரஜினிகாந்த்: முதல்வர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து

திரைவானில் சூரியன் ரஜினிகாந்த்:  முதல்வர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து
X

முதல்வர் ஸ்டாலின்

தாதா சாகேப் பால்கே விருது பெற்றுள்ள நடிகர் ரஜினிகாந்துக்கு, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

கடந்த 2019-ம் ஆண்டிற்கான தாதா சாகேப் பால்கே விருது, ரஜினிகாந்த்துக்கு அறிவிக்கப்பட்டது. டெல்லியில் இன்று நடைபெற்று வரும் விழாவில், ரஜினிக்கு இந்த விருது வழங்கப்படுகிறது. இதையொட்டி நடிகர் ரஜினிகாந்திற்கு பல்வேறு பிரபலங்கள், திரையுலகினர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

திமுக தலைவரும், தமிழக முதல்வருமாக மு.க. ஸ்டாலின், ரஜினிக்கு வாழ்த்து தெரிவித்து, டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். அதில், திரைத்துறையின் உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது பெறும் அன்பு நண்பர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த அவர்களுக்கு நெஞ்சம்நிறை வாழ்த்துகள்.

திரைவானின் சூரியன் ரஜினி அவர்கள், தமிழ்த் திரையுலகை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்று உலகளவிலான பல விருதுகளைப் பெற வேண்டும். வாழ்த்துகிறேன், என்று கூறியுள்ளார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!