Project K update-கல்கி கி.பி 2898 படத்தில் எஸ்.எஸ்.ராஜமௌலி சிறப்பு தோற்றத்தில்..??

Project K update-கல்கி கி.பி 2898 படத்தில் எஸ்.எஸ்.ராஜமௌலி சிறப்பு தோற்றத்தில்..??
X

Project K update-கல்கி ஹீரோ பிரபாஸ் மற்றும் பாகுபலி இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலி.(கோப்பு படம்)

பிரபல இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலி கல்கி கி.பி 2898 என்ற திரைப்படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

S.S.Rajamouli in Project K, Project K update, Kalki 2898 AD, Kalki 2898 AD update, SS Rajamouli makes a cameo appearance in Project K, the upcoming Prabhas-Deepika Padukone starrer, Prabhas, Deepika Padukone, Nag Ashwin, Amitabh Bachchan, Kamal Haasan

பிரபாஸ்-தீபிகா படுகோன் நடிக்கும் கல்கி கி.பி. 2898 என்ற திரைப்படத்தின் படப்பிடிப்புகள் நடந்து வருகின்றன. பெயர் வைக்கப்படுவதற்கு முன்னர் கல்கி கி.பி 2898 படத்துக்கு ப்ராஜெக்ட் கே என்று பெயர் வைக்கப்பட்டிருந்தது.

தற்போது இந்த படத்தின் கூடுதல் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது இந்த படத்தில் சிறப்புத் தோற்றத்தில் எஸ்.எஸ்.ராஜமௌலி நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.

Kalki 2898 AD update

சமீபத்தில் வெளியாகியுள்ள இந்த புதிய தகவலின்படி பாகுபலி புகழ் இயக்குனர் எஸ்.எஸ். ராஜமௌலி நாக் அஸ்வின் இயக்கத்தில் ஒரு சிறப்பு தோற்றத்தில் நடிக்க உள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

அவர் பலருக்கும் அறிமுகமில்லாத விளம்பர படங்களில் அவ்வப்போது சிறப்புத் தோற்றங்களில் நடித்திருந்தார் என்பது கூடுதல் தகவல். அவர் பெரிய திரையில் தோன்றுவதைப் பொருட்படுத்தவில்லை என்பதை உறுதிப்படுத்தினார்.

அவர் தனது ஆஸ்கார் விருது பெற்ற படத்தின் விளம்பர வீடியோவில் தோன்றினார். மேலும் திரைப்பட ஆர்வலர்கள் அவரை அவரது வசீகரமான திரை தோற்றத்திற்காகப் பாராட்டியுள்ளனர், என்பதும் குறிப்பிடத்தக்கது.


ராஜமௌலிக்கு முழுநேர நடிகராக விருப்பம் இல்லை என்றாலும், பிரபாஸ்-தீபிகா படுகோன் நடிக்கும் படத்தில் ஒரு சிறப்பு வேடத்தில் நடிக்க அவரை கல்கி கி.பி.2898 (ப்ராஜெக்ட் கே) டீம் சமாதானப்படுத்தியதாக கூறப்படுகிறது.

பாகுபலி இயக்குனரை அதன் நட்சத்திர நடிகர்களுடன் சேர்த்து, இந்த அறிவியல் புனைக்கதை, கற்பனைத் திரைப்படமாக சந்தேகத்திற்கு இடமின்றி இன்னும் பெரிய அளவில் பேசப்படும் உருவாக்கமாக வெளிவரும். இருப்பினும், கல்கி கி.பி.2898 திரைப்படத்தில் எஸ்.எஸ்.ராஜமௌலி நடிப்பது குறித்து எந்த தகவலையும் உறுதிப்படுத்தவில்லை. ஆனாலும் எந்த மறுப்பு செய்தியும் வெளியிடப்படவில்லை. அதனால் அவர் நடிப்பது உறுதியான தகவலா என்பதும் இன்னும் உறுதிசெய்யபபடவில்லை.

Kalki 2898 AD update

கல்கி கி.பி. 2898 பற்றி

முன்னதாக அறிவிக்கப்பட்டபடி, கல்கி கி.பி 2898 படத்தில் நடிகர் கமல்ஹாசன் முன்னணி வில்லனாக நடிக்கிறார். பழம்பெரும் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் மற்றும் நடிகை திஷா பதானி ஆகியோர் கல்கி கி.பி. 2898 திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இதில் பசுபதி, சாஸ்வதா சாட்டர்ஜி மற்றும் பலர் துணை வேடங்களில் நடித்துள்ளனர்.

கீர்த்தி சுரேஷ் நடித்த ‘நடிகையர் திலகம்’ படத்தை இயக்கிய நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ், அமிதாப் பச்சன், தீபிகா படுகோன் நடிக்கும் படம் ‘கல்கி 2898 AD’. ‘புராஜெக்ட் கே’ என்று விளம்பரப்படுத்தப்பட்ட இப்படத்தின் புதிய தலைப்பை படக்குழு சமீபத்தில் அறிவித்தது. சுமார் ரூ.400 கோடி பட்ஜெட்டில் உருவாகி வரும் இப்படம் பான் இந்தியா படமாக தயாராகி வருகிறது. இப்படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

சயின்ஸ் ஃபிக்‌ஷன் பாணியில் உருவாகி வரும் இப்படத்தில் கமல்ஹாசன் வில்லனாக நடிக்கிறார். வைஜெயந்தி மூவிஸ் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி பிலிம் சிட்டியில் நடைபெற்று வருகிறது.

Tags

Next Story
அறச்சலூா்: 200 மாணவர்களின் படைப்புகளுடன் அறிவியல் கண்காட்சி வெற்றிகரமாக முடிந்தது!