யுவன் பிறந்தநாளில் உருவானபாடல்! னைவு கூர்ந்த இளையராஜா

யுவன் பிறந்தநாளில் உருவானபாடல்! னைவு கூர்ந்த இளையராஜா
X
இளையராஜா தனது மகன் யுவன் சங்கர் பிறந்தநாள் வாழ்த்தாக, யுவன் பிறந்தபோது, தான் கம்போஸ் செய்த பாடலை நினைவு கூர்ந்துள்ளார்.

இசைஞானி இளையராஜாவின் மகனும் முன்னணி இளம் இசையமைப்பாளர்களில் ஒருவருமான யுவன் சங்கர் ராஜாவின் பிறந்த நாளான நேற்று(31/08/2022) யுவனின் ரசிகர்களும் திரையுலக நண்பர்களும் அவருக்கு வாழ்த்து மழை பொழிந்து மகிழ்வித்தனர்

இந்தநிலையில் இளையராஜா, எத்தனை பேர் வாழ்த்தினாலும் அத்தனை வாழ்த்துகளுக்கும் மேலாக சிகரம் வைத்தாற்போல் பழைய இனியதொரு நினைவை நினைவு கூர்ந்து மகனுக்கு மகிழ்நிறை வாழ்த்தைப் பகிர்ந்திருக்கிறார்.

அப்பகிர்வில், ''அப்போதெல்லாம்(1980களில்) படங்களுக்கான பாடல் கம்போஸிங்குக்காக ஆழியாறு அணைக்கட்டுக்கு சென்று அங்குள்ள சொகுசு பங்களாவில் நான்கைந்து நாட்கள் தங்கியிருந்து, பாடல் கம்போஸிங் செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்தோம்.

அப்படியொரு தருணத்தில், 'ஜானி' படத்துக்கான பாடல் கம்போஸிங்குக்காக இயக்குநர் மகேந்திரனும் தயாரிப்பாளர் கே.ஆர்.ஜியும் என்னை அழைத்துச் சென்றிருந்தனர்.

கம்போஸிங்கின் இடைப்பட்ட நாட்களில் கே.ஆர்.ஜி அவரது சொந்த ஊரான கோயம்புத்தூருக்கு சென்று வருவார். அப்படி ஒரு முறை சென்று வந்ததும் என்னிடம் வேகவேகமாக வந்து, "உன் மனைவிக்கு டெலிவரி ஆகியிருக்குய்யா. உனக்கு பையன் பொறந்திருக்கான்" என்று மகிழ்ச்சியோடு சொன்னார்.

அன்று அவர் வந்து சொன்ன அந்த மகிழ்வான நாளில்தான் இயக்குநர் மகேந்திரன் இயக்கத்தில் ரஜினி நடித்த 'ஜானி' படத்தின் 'செனோரீட்டா…' என்ற பாடல் கம்போஸிங் செய்தேன். அன்று யுவன் பிறந்ததைத்தான் கே.ஆர்.ஜி வந்து சொன்னார்." என்ற நினைவுப் பகிர்வில் இதனைக் கூறிவிட்டு "ஹாப்பி பர்த்டே யுவன்" என பாசத்துடன் பிறந்தநாள் வாழ்த்து கூறியிருக்கிறார் இளையராஜா.

Tags

Next Story
பெருந்துறையில் புகையிலை விற்பனைக்கு எதிராக கடைகளுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்