ஜெயிலர் படத்தில் சிவகார்த்திகேயன்! அவரே போட்டு உடைத்த உண்மை!

ஜெயிலர் படத்தில் சிவகார்த்திகேயன்! அவரே போட்டு உடைத்த உண்மை!
X
சிவகார்த்திகேயன் இந்த படத்தில் சர்ப்ரைஸாக வந்து அனைத்து ரசிகர்களையும் இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்துவார் என்று கூறப்பட்டது. இந்நிலையில் சிவகார்த்திகேயனே இந்த உண்மையைப் போட்டு உடைத்துவிட்டார். ஆம் ஜெயிலர் படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கிறார்....

ரஜினிகாந்த் நடிக்கும் ஜெயிலர் திரைப்படத்தில் சிவகார்த்திகேயனும் ஒரு கெஸ்ட் ரோலில் நடிப்பதாக பலரும் பேசி வந்த நிலையில், அவரே உண்மையைப் போட்டு உடைத்துவிட்டார். இதனால் சஸ்பென்ஸ் உடைந்தது என ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பேசி வருகின்றனர்.

பீஸ்ட் திரைப்படத்துக்கு பிறகு நெல்சனும் அண்ணாத்த படத்துக்குப் பிறகு ரஜினிகாந்தும் இணையும் புதிய படம் ஜெயிலர். சன்பிக்சர்ஸ் தயாரிப்பிலேயே மீண்டும் இணைகிறார்கள் இருவரும். இந்த படத்துக்கும் இசை அனிருத்தான். நாயகியாக தமன்னாவும் ரம்யாகிருஷ்ணனும் நடிக்கிறார்கள். மேலும் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால், கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார், பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெராப், தெலுங்கு நடிகர் சுனில் ஆகியோர் நடித்து வருகின்றனர். இவர்களுடன் சிவகார்த்திகேயனும் நடிக்கிறார் என்று சிலர் கிளப்பிவிட்டனர்.

ஆனால் இதுகுறித்த எந்த அப்டேட்டும் வரவில்லை. இத்தனை நடிகர்களின் ஆன் போர்டை அறிவித்தவர்கள் சிவகார்த்திகேயனை மட்டும் ஏன் ரகசியமாக வைத்திருக்கிறார்கள் என்று கேள்வி எழுந்தது. சர்ப்ரைஸாக வைத்திருக்கிறார்கள் என்று கூட பலர் சொன்னார்கள். ஏற்கனவே விக்ரம் படத்தில் ஒரு சர்ப்ரைஸாக சூர்யா வந்த காட்சி மிகப் பெரிய அளவில் பேசப்பட்டது. இதனால் சிவகார்த்திகேயன் இந்த படத்தில் சர்ப்ரைஸாக வந்து அனைத்து ரசிகர்களையும் இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்துவார் என்று கூறப்பட்டது.

இந்நிலையில் சிவகார்த்திகேயனே இந்த உண்மையைப் போட்டு உடைத்துவிட்டார். ஆம் ஜெயிலர் படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கிறார் என செய்திகள் பரவி வருவதில் எந்த உண்மையும் இல்லை. ஜெயிலர் படக்குழு தன்னை அப்ரோச் கூட பண்ணவில்லை என்று யூடியூப் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். இதனிடையே ஜெயிலர் படத்தின் கதை தனக்கு தெரியும் எனவும் உண்மையிலேயே நெல்சன் அண்ணன் படத்தை வேற லெவலுக்கு கொண்டு வருகிறார் என்றும் தெரிவித்துள்ளார்.

படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. ரஜினிகாந்த் நடிக்கும் பெரும்பான்மையான காட்சிகள் எடுக்கப்பட்டுவிட்டது. இப்போது ரஜினிகாந்த் - ஷிவராஜ்குமார் தொடர்பான காட்சிகல் நடைபெற்று வருகிறது. இந்த காட்சி ஒரு சண்டைக்காட்சி என்கிறார்கள்.

படப்பிடிப்பு மிக நேர்த்தியாக துரித கதியில் நடந்து வருகிறது. மேலும் இன்னும் 1 மாதம் அல்லது 45 நாட்களில் படப்பிடிப்பை முடித்துக் கொண்டு போஸ்ட் புரடக்ஷன் பணிகளை ஆரம்பித்து விடுவார்கள் என்று கூறப்படுகிறது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!