சிவகார்த்திகேயன் நடிப்பில் 'மாவீரன்' – வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு

சிவகார்த்திகேயன்  நடிப்பில் மாவீரன் – வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு
X

சிவகார்த்திகேயனின் புதிய படத்தின் பெயர்- மாவீரன்

'மண்டேலா' பட இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கத்தில், சிவகார்த்திகேயன் நடிக்க உள்ள 'மாவீரன்' படம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

கோலிவுட்டில் வளர்ந்து வரும் ஹீரோவான நடிகர் சிவகார்த்திகேயன் அடுத்தடுத்து வெற்றிப் படங்களை தந்து தற்போது முன்னணி ஹீரோவாக உயர்ந்து உள்ளார். டான் படம் வெற்றியடைந்து உள்ள நிலையில், டோலிவுட் இயக்குனர் அனுதீப் இயக்கத்தில், 'பிரின்ஸ்' படத்தில் நடித்து வருகிறார். தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகி வரும் இப்படம், தீபாவளி பண்டிகைக்கு திரைக்கு வர உள்ளது.

இந்நிலையில், 'மண்டேலா' படத்தின் இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கத்தில், சிவகார்த்திகேயன் நடிக்க உள்ளார். இந்த படத்தின் பெயர் 'மாவீரன்' என்று சில தினங்களுக்கு முன் தகவல்கள் வெளியான நிலையில், தற்போது அந்த படத்தின் பெயர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது. 'மாவீரன்' படத்தின் டைட்டில் வீடியோவை, டோலிவுட் சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு, தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு உள்ளார்.

தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாக உள்ள இப்படத்தை, அருண் விஸ்வா தயாரிக்க உள்ளார். படத்திற்கு பரத் சங்கர் இசை அமைக்க உள்ளார். இந்த படத்தின் தெலுங்கு பதிப்பிற்கு 'மகாவீருடு' என்று பெயரிடப்பட்டு உள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு, விரைவில் துவங்க உள்ளதாக படக்குழுவினர் தெரிவித்து உள்ளனர்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!