நடிகர் விஜய் பற்றிய ஆச்சர்ய உண்மைகள் என்ன தெரியுமா?

நடிகர் விஜய் பற்றிய ஆச்சர்ய உண்மைகள் என்ன தெரியுமா?
X

நடிகர் விஜய் 

நடிகர் விஜய் சில குணங்களில் வேறுபட்டு நிற்கிறார் என்பது பலருக்கு அறிந்திருக்க வாய்ப்பில்லை.

நடிகர் விஜய் பற்றிய சில சுவாரஸ்ய தகவல்கள் கிடைத்தது. அதை உங்களோடு பகிர்ந்து கொள்கின்றோம். தொடக்க காலத்தில் இவரெல்லாம் நடிகர் ஆகும் வாய்ப்பே இல்லை. அதற்கான மூஞ்சியும் இல்லை என்று அவமானப்பட்டவர். ஆனால், அதையெல்லாம் உடைத்து இன்று சிறந்த நடிகராக இருக்கிறார். இது அவரது தன்னம்பிக்கைக்கு சிறந்த உதாரணம்.

  • அவர் படிப்பை பாதியில் விட்டவர்.
  • 'போக்கிரி' சினிமா படப்பிடிப்பின் போது அவரது கண்கள் வீங்கியதால் அவருக்கு கண்ணில் சிறிய அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.
  • அவர் தண்ணியடிக்காத (மது) ஒரு சிறந்த மனிதர். (சினிமாவில் இது அதிசயம்)
  • அவர் தனது பிறந்த நாளைக் கொண்டாடுவதில்லை. கொண்டாட்டங்களை தவிர்த்து அதற்கு பதிலாக சில உதவிகளை செய்கிறார்.
  • 25 வருட சினிமா வாழ்க்கையில் சுமார் 60க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் நடித்துள்ளார். அந்த 25 வருட திரையுலக வாழ்க்கையில், கிட்டத்தட்ட 20 புதிய இயக்குனர்களை தமிழ் திரைப்படத் துறைக்கு அறிமுகப்படுத்தியுள்ளார், விஜய்.
  • பிரபுதேவா இயக்கத்தில் அக்‌ஷய் குமார் நடித்த 'ரவுடி ரத்தோர்' படத்தில் விஜய் சிறப்பு தோற்றத்தில் நடித்தார். சுவாரஸ்யமாக, அக்‌ஷய் குமார் தான் நடித்த 'துப்பாக்கி' படத்தை இந்தியில் 'ஹாலிடே' என்ற பெயரில் ரீமேக் செய்தார்.
  • அவர் ரஜினிகாந்தின் தீவிரமான ரசிகர்.
  • விஜய் கையால் நடப்பதில் வல்லவர். அவரது மறைந்த சகோதரி, விஜய் கையால் நடப்பதை பார்க்க மிகவும் விரும்புவாராம். சகோதரி மறைவால் விஜய் சிறிது காலம் மன அமைதி இழந்து தவித்தாராம்.
  • சினிமாவில மட்டுமே அதிரடி காட்டுவார். நிஜத்தில் அவர் பரம சாது. ஆர்ப்பாட்டம் இல்லாத அமைதியானவர்.
  • குடும்பத்துடன் நேரத்தை செலவிட விரும்புபவர்.

இப்படி நடிகர் விஜய் சில சிறப்பு குணங்களை பெற்றுள்ளதால்தான் அதிக ரசிகர்களை கொண்ட நடிகராக விளங்குகிறார் போலும்.

Tags

Next Story
அறச்சலூா்: 200 மாணவர்களின் படைப்புகளுடன் அறிவியல் கண்காட்சி வெற்றிகரமாக முடிந்தது!