"இட்லி வடை ராம் சரண்" ஷாருக் கானுக்கு வலுக்கும் எதிர்ப்பு..!

இட்லி வடை ராம் சரண் ஷாருக் கானுக்கு வலுக்கும் எதிர்ப்பு..!
X

Shah Rukh Khan Idli Joke-ஷாருக் கான், ஆமீர் கான், சல்மான் கான் ஆகியோருடன் ராம் சரண் 

அம்பானி திருமண விழாவில் நடிகர் ராம் சரணை ஷாருக் கான் அழைத்த விதம் இணையத்தில் ஷாருக் கானுக்கு எதிராக கருத்துக்கள் பரவி வருகின்றன.

Shah Rukh Khan Idli Joke,Shah Rukh Khan,Ram Charan

அண்மையில் ஜாம்நகரில் நடைபெற்ற பிரமாண்ட அம்பானி திருமண பூர்வ விழாவில் ஷாருக்கான் தனது முழு உற்சாகத்துடன் கலந்து கொண்டு மகிழ்ச்சியில் திளைத்திருப்பதை பார்த்தோம். ஷாருக்கான், ஆமீர் கான் மற்றும் சல்மான் கான் ஆகிய மூன்று கான்களும் ஒன்று சேர்ந்து blockbuster படமான RRR-ன் ஹிட் பாடலான ‘நாட்டு நாட்டுவுக்கு நடனமாடியபோது விருந்தினர்கள் உற்சாகக் குரல் எழுப்பினர். ஆனால், அடுத்து நடந்த சம்பவம் வெறும் அவமதிப்பு மட்டுமல்ல, தென்னிந்தியாவிலிருந்து வருபவர்களை இந்தி திரையுலகம் எவ்வாறு பாகுபடுத்துகிறது என்பதையும் காட்டியது.

Shah Rukh Khan Idli Joke

RRR படத்தில் நடித்த தெலுங்கு திரைப்பட நடிகர் ராம் சரணை மேடைக்கு அழைத்து நடனமாட ஷாருக்கான் அழைத்த போது, அவர் தமிழில் (ஆம், தெலுங்கில் இல்லை, தமிழில்) சில தவறான வார்த்தைகளை உபயோகித்து ‘இட்லி ராம் சரண்’ என்று முடித்தார். இந்த சம்பவம் தென்னிந்திய ரசிகர்களிடம் மட்டுமல்ல மக்களிடமும் பெரும் சீற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைதளங்களில் நடிகர் ஷாருக்கான் கடும் விமர்சனங்களை சந்தித்து வருகிறார்.

தென்னிந்திய திரையுலகின் பிரபல நடிகரான ராம் சரணை அவமதிக்கும் விதமாக ஷாருக்கான் காட்டிய இந்த செயல் ஏற்றுக்கொள்ள முடியாதது. ஒரு குறிப்பிட்ட பிராந்திய மொழியை (தவறாக) பயன்படுத்தி அவதூறு செய்வது என்பது தனிப்பட்ட நபரை இழிவுபடுத்துவது மட்டுமல்லாமல், தென்னிந்திய கலைஞர்கள் மற்றும் ரசிகர்கள் அனைவரையும் அவமதிப்பதாகும்.

இந்த சம்பவம் இந்தி திரையுலகின் ஒரு பெரிய பிரச்சனையை வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது. பாலிவுட் நீண்ட காலமாக தென்னிந்திய திரையுலகை விட தன்னை உயர்வாகக் கருதி வருகிறது. இந்திய சினிமாவின் ஒரு முக்கியமான அங்கமான தென்னிந்திய திரையுலகின் பங்களிப்பையும், திறமையையும் அங்கீகரிப்பதில் தயக்கம் காட்டுகிறது. இந்த தவறான கருத்து தான் ஷாருக்கான் போன்ற அனுபவம் வாய்ந்த நடிகர்களையும் இது போன்ற மோசமான செயல்களுக்கு தூண்டுகிறது.

Shah Rukh Khan Idli Joke

தென்னிந்திய திரையுலகம் இன்று பான்-இந்தியா அளவில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. ‘பாகுபலி’, ‘RRR’, ‘KGF’ போன்ற படங்கள் மொழி தாண்டி இந்தியா முழுவதும் கொண்டாடப்படுகின்றன. தென்னிந்திய நடிகர்கள் மற்றும் இயக்குநர்கள் தங்கள் திறமையால் இந்திய சினிமாவை உலக அரங்கில் கொண்டு செல்ல முக்கிய பங்கு வகிக்கின்றனர். இந்த மாற்றத்தை பாலிவுட் இன்னும் முழுமையாக ஏற்றுக் கொள்ளவில்லை என்பதே கவலைப்பட வேண்டிய விஷயம்.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற தென்னிந்திய மொழிகளில் தயாராகும் படங்கள் இந்திய சினிமாவின் அடையாளம். இந்த மொழிகளின்

திரைப்படங்களை மதிக்காமல், கேலி செய்தால் இந்தி திரையுலகின் ரசிகர்களையும் இழக்க நேரிடும் என்பதை புரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.

ஷாருக்கான் போன்ற புகழ்பெற்ற நடிகரிடமிருந்து இத்தகைய நடத்தை ஏற்கத்தக்கதல்ல. அவர் தனது கருத்துகளை தெரிவிக்கும் பொது அதிக கவனத்துடன் இருப்பதும், மற்றவர்களின் உணர்வுகளை மதிப்பதும் அவசியம். மேலும், தென்னிந்தியாவின் மொழிகளையும் கலாச்சாரத்தையும் ஆழமாக புரிந்து கொள்ளும் முயற்சியை அவர் எடுக்க வேண்டும்.

Shah Rukh Khan Idli Joke

இந்த சம்பவத்திற்கு ஷாருக்கான் இன்னும் மன்னிப்பு கேட்கவில்லை. இருப்பினும் சமூக வலைத்தளங்களில் அவருக்கு எதிரான விமர்சனங்கள் குவியத் தொடங்கியிருப்பதால் விரைவில் அவர் ஒரு மன்னிப்புக் குறிப்பை வெளியிடக்கூடும்.

தென்னிந்திய திரையுலகம் இது போன்ற தவறான சித்தரிப்புகளுக்கு குரல் கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டும். தென்னிந்திய கலைஞர்கள் மற்றும் ரசிகர்கள் இது போன்ற அவமதிப்புகளை சகித்துக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. இந்தி திரையுலகம் புரிந்து கொண்டு மாறும் வரை தொடர்ந்து சமூக வலைதளங்களிலும் பிற இடங்களிலும் தங்களது அதிருப்தியை தெரிவிப்பது முக்கியம்.

இந்த சம்பவம் பாலிவுட் மற்றும் இந்தியா முழுவதும் உள்ள திரையுலக ரசிகர்களுக்கும் ஒரு பாடமாக இருக்க வேண்டும். அனைத்து மொழிகளிலும், பிராந்தியங்களிலும் இருந்து தயாராகும் படங்கள் இந்திய சினிமாவை சிறப்படையச் செய்கிறது என்பதை புரிந்து கொள்வது அவசியம். பரஸ்பர மரியாதை மற்றும் புரிதலுடன் அணுகினால் மட்டுமே இந்திய சினிமா உண்மையிலேயே உலக அளவில் கொண்டாடப்படும்.

Shah Rukh Khan Idli Joke

முகேஷ் அம்பானி மகன் ஆனந்த் அம்பானி திருமண நிகழ்ச்சியில் ஷாருக் கான், அமீர்கான் மற்றும் சல்மான்கான் மூவரும் மேடையில் ஏறி நாட்டு நாட்டு பாடலின் இந்தி வெர்ஷனுக்கு நடனமாடினர். பாலிவுட் நடிகர் ஷாருக்கான் அப்போது நடிகர் ராம்சரண் மேடைக்கு வருமாறு பயன்படுத்திய வார்த்தை சர்ச்சையை கிளப்பியுள்ளது.

தென்னிந்திய நடிகர்களான ராம்சரணை இட்லி வடை ராம் சரண் என ஷாருக்கான் குறிப்பிட்டது ராம்சரண் ரசிகர்களை கடும் அதிருப்தியில் ஆழ்த்தி உள்ளது. அனைத்துக்கும் மேலாக ராம்சரணின் மனைவி உபாசனாவின் மேக்கப் ஆர்டிஸ்ட் போட்ட பதிவு தற்போது பூதாகரமாக வெடித்துள்ளது.

ஆனந்த் அம்பானி ப்ரி வெட்டிங்: தெலுங்கு திரையுலகில் இருந்து நாகார்ஜுனா குடும்பம், பிரபாஸ், அல்லு அர்ஜுன் உள்ளிட்ட யாரையும் அழைக்கவில்லை. மேலும், மலையாள திரையுலகம் மற்றும் கன்னட திரையுலகத்தில் இருந்து பிரபலங்களுக்கு அழைப்பு விடுக்கவில்லை. தெலுங்கு திரையுலகில் இருந்து ராம்சரண் மட்டுமே இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று இருந்தார்.

Shah Rukh Khan Idli Joke

இட்லி, வடை ராம் சரண்:

தென்னிந்தியர்களை குறிப்பாக இட்லி, சாம்பார் என வட இந்தியர்கள் அழைத்துக் கொண்டிருக்கும் நிலையில், ஷாருக்கானும் அதே போல இட்லி, வடை ராம் சரண் என அழைத்து மேடையில் ஏற்றி நடனமாட வைத்தார். ஷாருக்கான் ராம் சரணை அப்படி அழைத்தது தவறு என சோஷியல் மீடியாவில் ராம் சரண் ரசிகர்கள் ஷாருக்கானை திட்டித் தீர்த்து வருகின்றனர்.

Shah Rukh Khan Idli Joke

பற்ற வைத்த மேக்கப் ஆர்ட்டிஸ்ட்:

ஆரம்பத்தில், இதுகுறித்து ரசிகர்களுக்கு தெரியாமல் இருந்து வந்த நிலையில், ராம்சரண் மனைவி உபாசனாவின் மேக்கப் ஆர்ட்டிஸ்ட் ஜெபா ஹாசன் "நான் ஷாருக்கானின் சிறந்த ரசிகை.. ஆனால், ராம்சரணை இப்படி அவர் அசிங்கப்படுத்தியது எனக்கு கொஞ்சம் கூட பிடிக்கவில்லை. அதனால், அந்த நிகழ்ச்சிக்கு பிறகு அங்கிருந்து வெளியேறிவிட்டேன் என பதிவிட்டு இருந்தார். ஆனால், அதன் பின்னர் அவர் அதை டெலிட் செய்து விட்டதாக கூறப்படுகிறது. அவரது இன்ஸ்டாகிராம் போஸ்ட் ஸ்க்ரீன் ஷாட்டை ஷேர் செய்து ராம்சரண் ரசிகர்கள் ஷாருக்கானை ரேசிஸ்ட் என திட்டித் தீர்த்து வருகின்றனர்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!