ஜெயிலருக்கு மட்டும் அனுமதி, லியோ படத்திற்கு மறுப்பு ஏன்? சீமான் கேள்வி
நடிகர் விஜய் மற்றதும் சீமான்
ரஜினிகாந்த்தின் ஜெயிலர் படத்துக்கு அனுமதித்த அரசு விஜய்யின் லியோ திரைப்பட விழாவுக்கு அனுமதி கொடுக்காதது ஏன் என நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், விஜய் நடித்த பல படங்களின் இசைவெளியீட்டு விழா இதற்கு முன்பு நடைபெற்றுள்ளது. இந்தமுறை அனுமதி மறுப்பது ஏன்?
ஏ.ஆர். ரஹ்மான் இசைநிகழ்ச்சியில் நடைபெற்ற பிரச்னையை அரசு காரணம் காட்டுகிறது. ஏ.ஆர். ரஹ்மான் நிகழ்ச்சிக்கு அனுமதி கொடுத்தது காவல் துறை. அங்கு கள ஆய்வு செய்து அனுமதித்தது போல, நேரு உள்விளையாட்டு அரங்கிலும் ரசிகர்கள் வருகை குறித்து ஆய்வு செய்து அனுமதி வழங்க வேண்டும்.
ஏ.ஆர். ரஹ்மான் நிகழச்சிக்கு அனுமதி கொடுத்த அரசு, விஜய் இசை வெளியீட்டு விழாவுக்கு அனுமதி மறுப்பது ஏன்? மக்கள் அதிகம் கூடுவார்கள் என்ற அச்சத்தில் அனுமதி கொடுக்கவில்லை என்றால், காவல் துறை எதற்கு உள்ளது. ஜெயிலர் இசை வெளியிட்டு விழா தடையின்றி நடந்தது. நடிகர் விஜய்க்கு அரசியலுக்கு வருகை தருகிறார் என்பதற்காக நெருக்கடி கொடுக்கிறார்கள். இந்த நிகழ்ச்சிக்கு பாதுகாப்பு தரமுடியவில்லை என்பது காவல்துறையின் இயலாமையை காட்டுகிறதுஎன்று கேள்வி எழுப்பினார்.
அரசியல் கட்சியினர் மாநாடு நடத்தும் போது லட்சக்கணக்கானோர் கூடுகின்றனர். அப்போது பாதுகாப்பு அளிப்பது காவல் துறை தான். இப்போது அப்படி செய்வதற்கு முன்வராதது ஏன்?.
ஜெயிலர் இசை வெளியீட்டு விழாவுக்கு நேரு உள்விளையாட்டு அரங்கில் அனுமதி கொடுக்கப்பட்டது. விஜய்க்கு ஏன் கொடுக்கவில்லை. நீருக்குள் பந்தை எவ்வளவு பொத்தி வைத்தாலும் அது மேலே வரத்தான் செய்யும் என விஜய்க்கு ஆதரவாகப் பேசினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu