35 வருடங்களுக்கு பிறகு கமலுடன் இணைகிறார் சத்யராஜ்? நெசமாவா?

35 வருடங்களுக்கு பிறகு கமலுடன் இணைகிறார் சத்யராஜ்? நெசமாவா?
X
கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன் 2 படத்தில் மூத்த நடிகர் சத்யராஜ் நடிக்கவுள்ளதாக சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தியன் 2 படத்தின் ஷுட்டிங்கை மீண்டும் துவங்க நடிகர் கமல்ஹாசன் முடிவு செய்திருக்கிறார். இதற்கான மேக்அப் பணிகளுக்காக கமல் அமெரிக்கா சென்றுள்ளதாக சொல்லப்படுகிறது. செப்டம்பரில் இந்தியன் 2 ஷுட்டிங்கை மீண்டும் துவக்க படக்குழு முடிவு செய்திருப்பதாகவும், இதற்கான ஏற்பாடுகள் நடந்து வருவதாகவும் சொல்லப்படுகிறது.

டைரக்டர் ஷங்கரும் இந்தியன் 2 மற்றும் ஆர்சி 15 இரு படங்களின் வேலைகளையும் ஒரே நேரத்தில் முடிக்க திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. மேலும் படத்தில் நடிக்கும் நடிகர்களை முடிவு செய்து வருகின்றனர். சத்யராஜ் இப்படத்தில் ஒரு முக்கிய பாத்திரத்தில் நடிக்க பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக செய்திகள் வருகின்றன.

குழந்தை பிறந்துள்ளதால் இந்தியன் 2 படத்தில் இருந்து காஜல் அகர்வால் விலகியதாக தகவல் பரவியது. ஆனால் இந்தியன் 2 படத்தில் தான் நடிக்க உள்ளதாகவும், செப்டம்பர் 13 ம் தேதி இந்தியன் 2 ஷுட்டிங் மீண்டும் துவங்கப்பட உள்ளதாகவும் இன்ஸ்டாகிராமில் ரசிகர்களிடம் பேசிய காஜல் அகர்வால் உறுதி செய்தார்.

இதைத் தொடர்ந்து இந்தியன் 2 படத்தில் நவரச நாயகன் கார்த்திக் நடிக்க உள்ளதாகவும் தகவல் பரவியது. இந்நிலையில் லேட்டஸ்டாக, இந்தியன் 2 படத்தில் நடிக்க சத்யராஜிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது.

இந்தியன் 2 படத்திற்கு சத்யராஜ், ஓகே சொல்வார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. ஒருவேளை சத்யராஜ் ஓகே சொன்னால், கமல் படத்தில் 35 வருடங்களுக்கு பிறகு சத்யராஜ் நடிப்பார். இதற்கு முன் இருவரும் இணைந்து 1986 ல் ரிலீசான விக்ரம் படத்தில் நடித்திருந்தனர். அதில் கமல் ஹீரோவாகவும், சத்யராஜ் வில்லனாகவும் நடித்திருந்தார்.


சமீபத்தில் உயிரிழந்த விவேக் மற்றும் நெடுமுடி வேணுவிற்கு பதிலாக நடிக்கத்தான் நடிகர்கள் தேர்வு நடப்பதாக சொன்னார்கள். இதனால் சத்யராஜ் மற்றும் கார்த்திக் யாருடைய கேரக்டரில் நடிக்க போகிறார்கள் என தெரியவில்லை.

விவேக்கிற்கு பதிலாக தான் கார்த்திக் நடிக்கிறார் என சொல்லப்படுவதால், நெடுமுடி வேணு கேரக்டரில் தான் சத்யராஜ் நடிப்பார் என்று சொல்லப்படுகிறது.

இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இந்தியன் 2 படத்தின் வேலைகளை மீண்டும் துவங்குவதால் அந்த பழைய எதிர்பார்ப்பை மீண்டும் கொண்டு வருவதற்காக பிரபலமான, திறமையான நடிகர்களை படத்தில் நடிக்க வைக்க முயற்சி நடந்து வருவதாக சொல்லப்படுகிறது.

1996ல் ஷங்கர் இயக்கத்தில் கமல் நடித்த இந்தியன் படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகும் இந்தியன் 2 படத்தின் மீது ரசிகர்களுக்கு எப்போதும் தனி ஈர்ப்பு இருந்து வருகிறது. கமலை மீண்டும் சேனாதிபதி ரோலில் பார்க்க ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கிறார்கள்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்