நடிப்புக்கு முழுக்கு போடுகிறாரா சாய் பல்லவி?
ஊட்டியை அடுத்த கோத்தகிரியில் 1992-ஆம் வருடம் மே 9-ஆம் தேதி பிறந்த சாய் பல்லவி, கோயம்புத்தூரில் உள்ள ஆல்வின் கான்வென்ட் மெட்ரிக்.மேல் நிலைப்பள்ளியில் பள்ளிப் படிப்பை முடித்தவர், ஜார்ஜியாவில் உள்ள டிபிலிசி ஸ்டேட் யூனிவர்சிட்டியில் மருத்துவ பட்டப்படிப்பை முடித்துள்ளார்.
திரைப்பட துறையில் இருக்கும் மிக குறைவான தமிழ் நடிகைகளில் ஒருவரான சாய் பல்லவி, தமிழ் நாட்டை சேர்ந்தவர் என்றாலும், கதாநாயகியாக அறிமுகமானது மலையாள இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் 2015ம் ஆண்டு வெளிவந்த "பிரேமம்" திரைப்படத்தில் தான். 2015-ஆம் ஆண்டு வெளியாகி தென்னிந்திய மொழி திரைப்படங்களுள் பெரும் வெற்றி பெற்ற "பிரேமம்" திரைப்படம் மூலம் சாய்பல்லவிக்கு ரசிகர் பட்டாளம் குவிந்தது. மலர் டீச்சர் என ரசிகர்களிடத்தில் பெரும் கவனிப்பை பெற்றவர்.
2018-ம் ஆண்டு தியா படத்தில் நடித்து தமிழில் அறிமுகமானார். இத்திரைப்படத்தினை தொடர்ந்து மாரி 2, என்.ஜி.கே போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார்
மேலும் அடுத்ததாக மாவீரன் திரைப்படத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார் சாய் பல்லவி. கமல்ஹாசன் தயாரிக்கும் இப்படத்தில் சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடிக்கிறார்.
தென்னிந்திய அளவில் முன்னணி கதாநாயகியாக வலம் வருகிறார் சாய் பல்லவி. தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளிலும் முன்னணி இடத்தில் இருக்கும் சாய் பல்லவி, தன்னை தேடிவரும் பட வாய்ப்புகளை எல்லாம் ஏற்றுக்கொள்ளாமல், மனதிற்கு நிறைவான படங்களை மட்டுமே தேர்வு செய்து நடிப்பதில் கவனம் செலுத்தி வருகிறார். இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த கார்கி திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. சாய் பல்லவியின் நடிப்பும் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது.
இந்நிலையில், நடிகை சாய் பல்லவி தனது சொந்த ஊர் கோயம்புத்தூரில் மருத்துவமனை கட்ட திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சாய் பல்லவி ஜார்ஜியாவில் மருத்தவ படிப்பை முடித்தவர்.
படித்துக்கொண்டிருந்த நேரத்தில் தான் பிரேமம் படத்தில் நடிக்கும் வாய்ப்பை பெற்று சினிமாவிற்குள் வந்துள்ளார். இதனால், தற்போது தனது படிப்பை வீணடிக்கக்கூடாது என்று எண்ணியுள்ள சாய் பல்லவி மருத்துவமனை கட்டி அதை கவனித்துக் கொள்ள முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
மருத்துவமனையை கவனிக்க முடிவெடுத்துள்ளதால், நடிப்பில் இருந்து விலக சாய் பல்லவி முடிவெடுத்து விட்டாரா என்று கேள்வி எழுந்துள்ளது. இது குறித்த எந்த ஒரு அதிகாரபூர்வ தகவலும் வெளிவராத நிலையில், சாய் பல்லவி மருத்துவ பணியை கவனித்துக் கொண்டே, நடிப்பிலும் கவனம் செலுத்துவாரா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu