ஆலியா பட்டின் டார்லிங் படம்: தமிழ் தெலுங்கில் ரீமேக்

ஆலியா பட்டின் டார்லிங் படம்: தமிழ் தெலுங்கில் ரீமேக்
X
ஆலியா பட்டின் டார்லிங் படத்தின் வெற்றிக்குப் பிறகு இந்த படம் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் ரீமேக் செய்யப்படுகிறது

இந்தியில் ஆலியா பட், விஜய் வர்மா மற்றும் ஷெபாலி ஷா ஆகியோர் நடிப்பதில் வெளியான படம் டார்லிங். இந்த படத்தை ஆலியா பட், ஷாருக்கானின் ரெட் சில்லீஸ் நிறுவனத்துடன் இணைந்து தயாரித்தார்.

இப்படம் விமர்சகர்கள் மற்றும் ரசிகர்களிடம் பலத்த வரவேற்பைப் பெற்றாலும், பல்வேறு விமர்சனங்களும் எழுந்தன.

டார்லிங் படத்தின் வெற்றிக்குப் பிறகு தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் படத்தைத் தயாரிக்கப் போவதாக தெரிவித்துள்ளனர். இது குறித்து படத்தின் தயாரிப்பாளர்கள் கூறுகையில், . இந்தப் படம் மற்ற மொழிகளில் டப் செய்யப்படாது. அதற்கு பதிலாக, தமிழ் மற்றும் தெலுங்கில் கதை மற்றும் கதாபாத்திரங்களில் மாற்றங்கள் செய்து ரீமேக் செய்யப்படும்.

டார்லிங்ஸின் ஸ்கிரிப்ட் எங்களிடம் உள்ளது. படத்தை எடுக்கும்போதே , அதை பல மொழிகளில் உருவாக்க முடிவு செய்தோம். படத்தை பல மொழிகளில் மாற்றியமைக்கும் அம்சங்களுடன் கதை உள்ளது. டார்லிங் மும்பையில் நடந்த கதை, ஆனால் இப்போது தமிழ் மற்றும் தெலுங்கிற்கு அதற்கேற்றாற்போல் உருவாக்குவோம் என்று கூறினார்

இந்த படத்தை ரீமேக் செய்வதன்மூலம் ஷாருக்கானின் ரெட் சில்லீஸ் நிறுவன டோலிவுட் மற்றும் கோலிவுட்டில் முதன்முதலாக அடியெடுத்து வைக்கிறது

Tags

Next Story
மொளசி கலைஞர் கனவு இல்லம் கட்டுமான பணியை ஆட்சியர் ஆய்வு..!