Rashmika Mandanna Tattoo Name Meaning- ராஷ்மிகா மந்தனாவின் டாட்டூ ரகசியம்..!

Rashmika Mandanna Tattoo Name Meaning
நடிகை ராஷ்மிகா மந்தனா, 'நேஷனல் க்ரஷ்' என்று இளைஞர்களால் அழைக்கப்படுகிறார். அந்த அளவுக்கு இளைஞர்களின் கனவுக்கன்னியாக மாறிவிட்டார்.
தமிழ், தெலுங்கு மற்றும் இந்தியில் ராஷ்மிகா நடித்து வருகிறார். தற்போது, நடிகர் விஜய் நடித்த 'வாரிசு' படத்தில் ராஷ்மிகா, விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்தார். விஜய்க்கு சரியான ஜோடியாக கலக்கினார்.
Rashmika Mandanna Tattoo Name Meaning
பல பேட்டிகளில் ராஷ்மிகா, விஜயுடன் வாரிசு படத்தில் நடிப்பதற்கு முன்னர் 'விஜயுடன் நடிக்க மிகவும் ஆசை' என்று கூறியிருந்தார். அந்த ஆசை, வாரிசு படத்தின் மூலமாக அவருக்கு நிஜமாகிவிட்டது. 'வாரிசு' ஷூட்டிங் ஸ்பாட்டில், விஜய்யுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை ராஷ்மிகா அந்த காலகட்டத்தில் பகிர்ந்திருந்தார். அந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலானது.
தெலுங்கில், வெளிவந்து சூப்பர் ஹிட்டான 'சீதா ராமம்' படத்திலும் ராஷ்மிகா மந்தனா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்தியில் அமிதாப் பச்சன் நடிப்பில் வெளியான 'குட் பை' படத்திலும் ராஷ்மிகா நடித்திருந்தார்.
Rashmika Mandanna Tattoo Name Meaning
Rashmika Mandanna Tattoo Name Meaning
ராஷ்மிகா தனது கையில் 'Irreplaceable' என்ற வார்த்தையை டாட்டூவாக போட்டுள்ளார். இதன் அர்த்தம் 'மாற்ற முடியாதது' என்பதாகும். replaceable என்றால் மாற்றக்கூடியது என்று பொருள்படும். அதற்கு எதிர்ச்சொல் தான் irreplaceable. அதாவது மாற்ற முடியாதது.
இந்த வினாவை எழுப்பலாம்.மாற்ற முடியாதது என்று எதைக்குறிப்பிடுகின்றார். காதலையா? நமக்கு எதற்கு அந்த வம்பு? ரசிகர்களிடமே விட்டுவிடுவோம்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu