ரசிகர்களை நேரில் சந்தித்து தீபாவளி வாழ்த்து கூறிய ரஜினிகாந்த்

ரசிகர்களை நேரில் சந்தித்து தீபாவளி வாழ்த்து கூறிய ரஜினிகாந்த்
X

ரஜினி காந்த்.

தீபாவளியை யொட்டி ரஜினிகாந்த் தனது ரசிகர்களை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து கடைசியாக வெளியான படம் அண்ணாத்த. இதில் நயன்தாரா, குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ் மற்றும் பெரிய நடிகர்கள் பட்டாளமே நடித்து இருந்தது.ஆனால் படம் எதிர்பார்த்த வெற்றியை கொடுக்கவில்லை. அதனால் அடுத்து அவர் நடிக்கும் படம் மிகப்பெரிய வெற்றியை பெற வேண்டும் என்ற கட்டாயத்தில் ரஜினிகாந்த் உள்ளார். தற்போது அவர் நடிக்கும் ஜெயிலர் படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கி வருகிறார். விஜய்யின் பீஸ்ட் படத்தை நெல்சன் திலீப்குமார் கடைசியாக இயக்கி இருந்தார். இந்த படம் பெரிய வெற்றியை பெறவில்லை. இதனால் அதிருப்தி அடைந்த விஜய் ரசிகர்கள் இயக்குனர் நெல்சன் திலீப்குமாரை சமூக வலைத்தளத்தில் கடுமையா விமர்சித்தார்கள். இந்த சூழ்நிலையில் ஜெயிலர் படத்தை இயக்கும் வாய்ப்பு நெல்சன் திலீப்குமாரிடம் இருந்து பறிக்கப்பட்டு விட்டது என்று பரபரப்பாக பேசப்பட்டது. ஆனால் இயக்குனரை மாற்ற வேண்டாம் என்று ரஜினிகாந்த் சொல்லி விட்டார். அதனால் ஜெயிலர் பட சூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. வெற்றி படத்தை கொடுத்தே ஆக வேண்டும் என்ற நிலையில் ரஜினிகாந்தும் ஆர்வத்துடன் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார்.

இந்த பரபரப்பான சூழ்நிலையில் சென்னையில் உள்ள தனது வீட்டில் ரஜினிகாந்த் தீபாவளி பண்டிகையை நேற்று உற்சாகமாக கொண்டாடினார். வழக்கமாக தீபாவளி அன்று ரசிகர்கள் ரஜினிகாந்த் வீட்டு முன்பு கூடிவிடுவது வழக்கம். அதே போன்று நேற்று காலையிலேயே ரஜினிகாந்த் வசிக்கும் போயஸ்கார்டன் வீட்டு முன்பு ரசிகர்கள் திரண்டு இருந்தார்கள். ரசிகர்கள் திரண்டு இருப்பதை அறிந்த ரஜினிகாந்த் வீட்டில் இருந்து வெளியில் வந்து அவர்களை சந்தித்தார். அப்போது ரஜினிகாந்த் புத்தாடை அணிந்து இருந்தார். ரசிகர்களுக்கு அவர் தீபாவளி வாழ்த்து கூறினார். ரசிகர்களும் அவருக்கு தீபாவளி வாழ்த்து தெரிவித்தனர். ரசிகர்களை பார்த்து கைகூப்பியும், கை அசைத்தும் வாழ்த்து தெரிவித்தார். ரஜினிகாந்தை பார்த்த ரசிகர்கள் உற்சாகமடைந்து வாழ்த்து கோஷம் எழுப்பினார்கள். சிறிது நேரம் ரசிகர்களுடன் இருந்த அவர் பின்னர் வீட்டிற்குள் சென்று விட்டார்.

வீட்டில் தனது குடும்பத்தினருடன் ரஜினிகாந்த் தீபாவளியை கொண்டாடினார். வீட்டில் தனது பேரக்குழந்தைகளுடன் சேர்ந்து பட்டாசு வெடித்து தீபாவளியை உற்சாகமாக கொண்டாடினார். அவருடைய மகள் ஐஸ்வர்யா தனது இருமகன்களுடன் ரஜினிகாந்தை சந்தித்து ஆசி பெற்றார். தன்னுடைய இரண்டு பையன்களுக்கும் காலில் மஞ்சள், சந்தனம், குங்குமத்தை ஐஸ்வர்யா பூசினார். இதை வெள்ளை நிற ஜிப்பா உடையில் ரஜினிகாந்த் நின்று பார்த்து கொண்டு இருந்தார். இந்த படங்களை ஐஸ்வர்யாக தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த படம் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. அதன்பிறகு தனது நண்பர்களையும் ரஜினிகாந்த் சந்தித்தார்.

Tags

Next Story