அண்ணனின் 80வது பிறந்தநாள்: தங்க காசுகளால் அபிஷேகம் செய்த ரஜினி

அண்ணனின்  80வது பிறந்தநாள்: தங்க காசுகளால் அபிஷேகம் செய்த ரஜினி
X

தனது அண்ணன் சத்யநாராயண ராவுடன் ரஜினி

நடிகர் ரஜினிகாந்த் அவரது அண்ணன் சத்யநாராயணாவின் 80வது பிறந்தநாள் விழாவில் பங்கேற்ற புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

ரஜினியின் மிகப்பெரிய பலமாக இருப்பவர் அவரது அண்ணன் சத்யநாராயணா தான் என்று சொல்லப்படுவதுண்டு. தனது பெற்றோருக்கு இணையாக அண்ணன் சத்யநாராயணா மீது நடிகர் ரஜினிகாந்த், மிகுந்த மரியாதையும், பாசமும் வைத்துள்ளார்.

சத்யநாராயணா கர்நாடக மாநில அரசின் சுகாதாரத்துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். அவர் நேற்று தனது 80வது பிறந்தநாளை கொண்டாடியிருக்கிறார். அதுமட்டுமின்றி, அவரது மகன் ராமகிருஷ்ணாவும் நேற்று தனது 60வது பிறந்தநாளை கொண்டாடியிருக்கிறார். இந்நிலையில், 80வது பிறந்தநாள் கொண்டாடிய அண்ணன் சத்யநாராயணாவுக்கு தங்க காசுகளால் ரஜினி அபிஷேகம் செய்திருக்கிறார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது


அண்ணாத்த படத்துக்கு பின்னர் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகும் ரஜினி நடித்து வரும் திரைப்படம் ஜெயிலர். இந்தப் படத்தை நெல்சன் இயக்கி வருகிறார். ரஜினியுடன் மோகன்லால், சிவ ராஜ்குமார், ஜாக்கி ஷெராஃப், தமன்னா, ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு உள்ளிட்ட ஏராளமான பிரபலங்கள் நடித்து வருகின்றனர். இந்தப் படத்தின் படப்பிடிப்பு கர்நாடக மாநிலம் மங்களூர் பகுதியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக ரஜினிகாந்த் கடந்த சில நாட்களாக பெங்களூரில் தங்கியிருக்கிறார்.

ஜெயிலர் ஷூட்டிங்கில் பிஸியாக இருக்கும் ரஜினிகாந்த், தனது அண்ணன் சத்யநாராயணாவின் பிறந்தநாள் விழாவில் கலந்துகொண்டிருக்கிறார். ரஜினிகாந்த் மனைவி, லதா இந்நிகழ்ச்சியில் ரஜினிகாந்த் மற்ற குடும்பத்தினருடன் கலந்து கொண்டார்.


அத்துடன், ஒரேநாளில் பிறந்தநாள் கொண்டாடிய அண்ணன் மற்றும் அண்ணன் மகன் இருவரையும் வாழ்த்தி ரஜினிகாந்த் ட்விட் செய்திருக்கிறார். விழாவின் புகைப்படங்களை பகிர்ந்துகொண்டு, ரஜினிகாந்த் சமூக ஊடகங்களில் தனது சகோதரரின் 80 வது பிறந்தநாள் மற்றும் அவரது மருமகன் ராமகிருஷ்ணாவின் 60 வது பிறந்தநாள் ஆகிய இரட்டை கொண்டாட்டங்களைக் குறித்து உணர்ச்சிவசப்பட்ட ட்வீட் செய்துள்ளார், "என் சகோதரர் சத்தியநாராயண ராவ் கெய்க்வாட்டின் 80 வது பிறந்தநாளையும் அவரது மகன் ராமகிருஷ்ணாவின் 60 வது பிறந்தநாளையும் ஒரே நாளில் என் குடும்பத்துடன் கொண்டாடியதில் மகிழ்ச்சியாக இருந்தேன் ... என்னை நானாக மாற்றிய இந்த தங்க இதயத்தில் தங்கத்தை பொழிவதை பாக்கியமாக உணர்கிறேன். இன்று நான் கடவுளுக்கு நன்றி கூறுகிறேன்."

Tags

Next Story
ai solutions for small business