ரஜினி நடித்த அண்ணாமலை வசூல் விபரம் இப்போ வெளியாகி இருக்கு..!

Annamalai Padam
X

Annamalai Padam

Annamalai Padam-ரஜினி நடித்து வெளிவந்த அண்ணாமலை படம் ரஜினிக்கு முற்பாதியில் கலகலப்பாகவும், பிற்பாதியில் சீரியஸ் கதையாகவும் நகர்ந்த வெற்றிப்படமாகும்.

Annamalai Padam-அண்ணாமலை ரஜினி நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியடைந்த படம். சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து கடந்த 1992ம் ஆண்டு வெளிவந்த அந்த படத்தில் ரஜினிக்கு நண்பனாக சரத்பாபு நடித்திருந்தார். அதில் ரஜினி பேசும் வசனங்கள் அதிரடியான கைத்தட்டல்களை பெற்றது. 'நான் மலைடா.. அண்ணாமலை.'போன்ற ரஜினி பேசும் வசனங்கள் மிகவும் ரசிக்கப்பட்டவை.

இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக குஷ்பூ ஜோடியாக நடிக்க தேவா இசையமைத்திருந்தார். படத்தில் இடம்பெற ஒவ்வொரு பாடல்களும், குறிப்பாக பின்னணி இசையும் மிகப்பெரிய வரவேற்பை மக்கள் மத்தியில் பெற்றது. இந்த படத்தில் குஷ்பூவுடன் ரஜினி நடித்த தொடக்க காட்சிகளில் 'அப்பிடியே பாத்துட்டேன்...'என்று சொல்லி குஷ்பூவை நிலைகுலைய செய்ததும், பாம்பூ..பாம்பூ என்று விடுதிக்குள் ரஜினி பாம்பு காட்சியில் நடித்ததும் பெரும் வரவேற்பை பெற்றன. அந்தப்படத்தின் வசூல் விபரம் தற்போது வெளியாகியுள்ளது.

அண்ணாமலை வசூல் விவரம்

90களின் காலகட்டத்தில் வெளிவந்த அண்ணாமலை திரைப்படம் உலகளவில் ரூ. 17.69 கோடி வரை வசூல் செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

அதுமட்டுமின்றி இந்தியளவில் ரூ. 13.65 கோடியும், வெளிநாட்டில் ரூ. 4.04 கோடியும் வசூல் செய்துள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது. அன்றைய காலகட்டத்தில் இந்த வசூல் என்பது மிகப்பெரிய சூப்பர் டூப்பர் ஹிட். அன்றில் இருந்து இன்று வரை ரஜினி பாக்ஸ் ஆஃபீஸ் ஹிட் லிஸ்டில் இருக்கிறார்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Tags

Next Story
ராசிபுரம் அருகே இரு சமூகத்தினர் மோதல்- போலீசார் குவிப்பு..!