பொன்னியின் செல்வன் படத்திற்காக இணையும் ரஜினி, கமல்: சும்மா அதிருமுல்ல

பொன்னியின் செல்வன் படத்திற்காக இணையும் ரஜினி, கமல்: சும்மா அதிருமுல்ல
X
மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள 'பொன்னியின் செல்வன்' படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா குறித்த புதிய தகவல் வெளியாகியுள்ளது.

பொன்னியின் செல்வன் கதையை திரைப்படமாக எடுப்பது என்பது எம்ஜிஆர் முதல் அனைத்து கலைஞர்களுக்கும் விருப்பமாக இருந்தது. தற்போது மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் 'பொன்னியின் செல்வன்' படத்தை இந்திய சினிமாவே எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கிறது.

விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்ய லட்சுமி, த்ரிஷா, பிரபு, சரத்குமார், விக்ரம் பிரபு, கிஷோர், ஜெயராம், லால், ரகுமான் என பிரபல நட்சத்திர பட்டாளங்கள் நடிக்கும் 'பொன்னியன் செல்வன்' படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தப்படத்தை பிரம்மாண்டமாக இரண்டு பாகங்களாக உருவாக்குகிறார் இயக்குனர் மணிரத்னம்.

மெட்ராஸ் டாக்கிஸ் மற்றும் லைக்கா நிறுவனம் இணைந்து தயாரிக்கும் இந்த படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். இந்தப்படத்தின் புரோமோஷன் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

படத்தின் முதல் பாடல் பொன்னி நதி கடந்த வாரத்தில் வெளியாகி ஒரு கோடியே 20 லட்சம் பார்வைகளை யூடியூபில் கடந்துள்ள நிலையில், அடுத்த வாரத்தில் படத்தின் இரண்டாவது பாடலை வெளியிடவும் படக்குழு திட்டமிட்டு அதற்கான வேலைகளை தற்போது மும்முரமாக செய்து வருகிறது.

படத்தின் டீசர், பாடல் என அடுத்தடுத்து பிரம்மாண்டமாக வெளியாகியுள்ளது. இந்நிலையில் 'பொன்னியின் செல்வன்' படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.


அதன்படி வருகிற செப்டம்பர் 6-ஆம் தேதி சென்னையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெறவுள்ளதாக கூறப்படுகிறது. பாடல் வெளியீட்டிற்கு சிறப்பு விருந்தினர்களாக ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசனுக்கு அழைப்பு விடப்பட்டுள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.

மணிரத்னம் இயக்கத்தில் ரஜினி, கமல் இருவருமே நடித்திருப்பதால் இருவரும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அதிக வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. 'பொன்னியின் செல்வன்' படம் வரும் செப்டம்பர் 30ஆம் தேதி பிரமாண்டமாக உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது .

படத்தின் கடந்த டீசர் வெளியீட்டின்போதே இவர்கள் கலந்து கொள்வார்கள் என்று தகவல்கள் வெளியான நிலையில், தற்போது இசை வெளியீட்டிற்கும் இவர்களுக்கு அழைப்பு விடப்பட்டுள்ளது.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!