ராஜா ராணி 2 சீரியல் நடிகர்கள் யார் தெரியுமா..?
raja rani 2 serial cast-ஆஷா கௌடா (கோப்பு படம்)
Raja Rani 2 Serial Cast
விஜய் தொலைக்காட்சியில் சூப்பர்ஹிட்டாக ஓடி சமீபத்தில் முடிவுக்கு வந்த சீரியல் தான் ராஜா ராணி 2. இந்த சீரியலில் முதலில் ஆல்யா மானசா மற்றும் சித்து முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வந்தனர். பின் ஆல்யா மானசாவிற்கு பதிலாக ரியா கதாநாயகியாக நடிக்க வந்தார்.
ஆனால், சில காரணங்களால் அவரும் இந்த சீரியலில் இருந்து வெளியேற, அவருக்கு பதிலாக ஆஷா கௌடா நடித்து வந்தார். அதே போல் முதலில் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் விஜே அர்ச்சனா நடித்து வந்தார்.
பின் அவருக்கு பதிலாக அர்ச்சனா குமார் என்பவர் நடிக்க துவங்கினார். பரபரப்பான இறுதி கட்டத்தை எட்டிய இந்த
Raja Rani 2 Serial Cast
சீரியல் கடந்த 21ஆம் தேதி முடிவுக்கு வந்தது.
ராஜா ராணி 2 சீரியல் முடிவுக்கு வந்தது ரசிகர்கள் சற்று வருத்தமாக இருந்தாலும், அனைவரையும் திருப்திப்படுத்தும் வகையில் தான் கிளைமாக்ஸ் அமைத்திருந்தது. விஜய் டிவியின் சூப்பர்ஹிட் சீரியல்களில் ஒன்றான ராஜா ராணி 2 சீரியலில் நடித்த நடிகர், நடிகைகளின் விவரம் குறித்து தான் தற்போது பார்க்கவிருக்கிறோம்.
ராஜா ராணி 2 கதைச்சுருக்கம்
சிறுவயதிலிருந்து காவல் அதிகாரியாக வரவேண்டும் என்ற கனவுடன் வளரும் சந்தியா சந்தர்ப்ப சூழ்நிலையால் இனிப்புக்கடைக்காரரான சரவணன் என்பவரை திருமணம் செய்கின்றார். சரவணன் படிக்கவில்லை.தாய் மீது அதிக பாசமும் மரியாதையும் கொண்டவன்.
இவளின் புகுந்த வீடு பாரம்பரியம் மிக்க குடும்பமாக இருந்ததால் தன் கனவு உடைந்துவிட்டதாக எண்ணி சந்தியா வருத்தப்பட்டார். பிறகு அவரது கனவை அறியும் சரவணன் அவருக்கு உறுதுணையாக இருந்தார். பல தடைகளைக் கடந்து தனது கணவனின் துணையுடன் காவலர் பயிற்சியில் எப்படி வெற்றி பெறுகின்றார் என்பது தான் கதை.
Raja Rani 2 Serial Cast
நடிகர், நடிகைகளின் பட்டியல்
சந்தியா IPS : ஆஷா கௌடா
சிவகாமி சுந்தரம் : பிரவீனா
சுந்தரம் : சைவம் ரவி
பாலாஜி தியாகராஜன் : செந்தில் குமார்
அர்ச்சனா குமார் : அர்ச்சனா செந்தில் குமார்
வைஷ்ணவி : பார்வதி
சரவணன் : சித்து
Raja Rani 2 Serial Cast
துணைக் கதாபாத்திரங்கள்
சிவகுமார் (சந்தியாவின் தந்தை, இந்த தொடரில் இறந்து விட்டார்)
காயத்ரி பிரியா - சரண்யா (சந்தியாவின் தாய், இந்த தொடரில் இறந்து விட்டார்)
மணி - மணி (சந்தியாவின் சகோதரன்)
நிஹாரிகா ராஜ்ஜித் - ஜனனி (மணியின் மனைவி)
சைவம் ரவி - --- (சரவணனின் தந்தை)
வைஷ்ணவி சுந்தர் - பார்வதி (சரவணனின் இளைய சகோதரி)
பாலாஜி தியாகராஜன் - செந்தில் (சரவணனின் முதலாவது இளைய சகோதரன்)
அர்ச்சனா - அர்ச்சனா (செந்திலின் மனைவி)
பரதோஷ் - கதிர் (சரவணனின் இரண்டாவது இளைய சகோதரன்)
நவ்யா சுஜி -
ராஜா ராணி–2 என்பது 12 அக்டோபர் 2020 ஆம் ஆண்டு முதல் திங்கள் முதல் வெள்ளி வரை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குடும்பக்கதைக்களம் கொண்ட நாடகத் தொடர் ஆகும்.
Raja Rani 2 Serial Cast
இந்த தொடர் இந்தி மொழித் தொடரான என் கணவன் என் தோழன் என்ற தொடரின் மறு ஆக்கம் ஆகும். இந்த தொடரில் ஆஷா கௌடா ரியா விஷ்வநாதன் ஆகியோர் முக்கிய பாத்திரத்தில் நடிக்கின்றனர். ஆஷா வி. கௌடா, சந்தியா என்ற கதாபாத்திரத்தில் நடிக்க இவருக்கு ஜோடியாக 'சித்து' என்பவர் சரவணன் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்..
முதல் பருவத்தை இயக்கிய 'பிரவீன் பேனாட்' என்பவரே இந்த பருவத்தையும் இயக்கியுள்ளார்.இந்த தொடரின் இறுதி அத்தியாயம் 21 மார்ச் 2023 அன்று ஒளிபரப்பப்பட்டு, 725 அத்தியாயங்களுடன் நிறைவு பெற்றது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu