Prabhas failure Flims Yogi Re-Release-நடிகர் பிரபாஸ் நடித்த பழைய படங்கள் ரீ ரிலீசில் ட்ரெண்டிங்..!

Prabhas failure Flims Yogi  Re-Release-நடிகர் பிரபாஸ் நடித்த பழைய படங்கள் ரீ ரிலீசில் ட்ரெண்டிங்..!
X

நடிகர் பிரபாஸ் (கோப்பு படம்)

பழைய படங்களை தூசி தட்டி மீண்டும் ரீ ரிலீஸ் செய்யும் ட்ரெண்டிங் தற்போது சூடுபிடித்துள்ளது.

Prabhas failure Flims Re-Release in Tamil, Prabhas failure Flims Re-Release, Prabhas failure Flims Yogi Re-Release, Prabhas Latest News, Prabhas Cinema Carrier

ஏற்கனவே பிரபாஸின் தோல்வியான படங்களை மீண்டும் மெருகேற்றி புதிய படங்கள்போல ரிலீஸ் செய்து வருகின்றனர். அந்த படங்களும் நன்றாக ஓடி வசூல் செய்வதாக கூறுகின்றனர்.


ஆமாம், பிரபாஸ் இப்போது இந்தியாவைத் தாண்டி உலகம் கவனிக்கும் நட்சத்திரமாகிவிட்டார். ஹாலிவுட் நட்சத்திர இயக்குனர்களின் கவனமும் பிரபாஸ் மீது விழுந்துள்ளது. பாகுபலிக்குப் பிறகு, அவர் நடித்த சாஹோ, ராதேஷ்யம் மற்றும் ஆதிபுருஷ் ஆகிய படங்கள் ஏமாற்றம் அளித்தாலும், பாக்ஸ் ஆபிஸில் நல்ல வசூலைப் பெற்றன.

இந்நிலையில் தற்போது டோலிவுட்டில் ரீ-ரிலீஸ் ட்ரெண்ட் ஓடிக்கொண்டிருக்கிறது. பிரபாஸ் நடித்த 'பில்லா', 'வர்ஷம்' ஆகிய படங்கள் மீண்டும் திரையரங்குகளில் வெளியாகியுள்ளன. பாக்ஸ் ஆபிஸில் அது நன்றாகவே ஓடியது. இப்போது பிரபாஸ் நடிக்கும் மற்றொரு படம் 4K பதிப்பில் திரையரங்குகளில் வரவுள்ளது.

பொதுவாக வெற்றிப் படங்கள் மீண்டும் வெளியாகும். ஆனால், பிரபாஸ் கேரியரில் தோல்வியடைந்த 'யோகி' தற்போது மீண்டும் ரிலீஸ் ஆக உள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்தப்படம் 2007ல் ஜனவரி 14ம் தேதி வெளியானது.

பிரபாஸ் நடித்த 'யோகி' திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் பெரிய வெற்றியை பெறவில்லை. இப்படம் கன்னடத்தில் மாபெரும் வெற்றி பெற்ற ‘ஜோகி’ படத்தின் ரீமேக் ஆகும். கன்னடத்தில் சிவராஜ் குமார் நடித்த வேடத்தை தெலுங்கில் பிரபாஸ் ஏற்று நடித்தார்.


அப்போது ‘யோகி’ படம் ஒரே நேரத்தில் 250க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகி சுமார் 13 கோடி வசூல் செய்தது. சுமார் 20 கோடி பட்ஜெட்டில் வெளியான இப்படம் தோல்வியடைந்தது. அதன் பிறகு ‘யோகி’ படம் மலையாளம், ஹிந்தி, தமிழ் என மொழிமாற்றம் செய்யப்பட்டு அங்கும் தோல்வியடைந்தது.

தற்போது இந்த 'யோகி' படம் மீண்டும் ஆகஸ்ட் 18ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்தப் படத்தின் உரிமையை வைத்திருக்கும் தயாரிப்பு நிறுவனம், சமீபத்திய 4K தொழில்நுட்பம் மற்றும் சிறந்த ஒலி தரத்துடன் படத்தை மீண்டும் வெளியிடுவதாக அறிவித்துள்ளது.

சில மாதங்களுக்கு முன் ரீ-ரிலீஸ் ஆன பிரபாஸ் நடித்த 'பில்லா', 'வர்ஷம்' படங்கள் நல்ல வசூலை அள்ளியது. 'யோகி' படமும் மிகப்பெரிய வசூலை அள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தை விவி விநாயக் இயக்குகிறார். இந்தப் படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக நயன்தாரா நடித்திருந்தார்.

கோட்டா ஸ்ரீனிவாஸ் ராவ், அல்லி, சுப்புராஜ், சுனில் மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். மேலும் இந்த முறை யோகி படம் எப்படி வசூல் செய்யும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். அடடே இது நல்லா இருக்கே. கையை கடித்த படங்கள் ஏதோ கொஞ்சம் கைகொடுத்தால் போதும் என்ற மனா நிலையில் இருக்கும் தயாரிப்பாளர்கள் இப்படியும் யோசிக்கலாமோ..?

இது கூட பிரபாசுக்கு ஓகே. அவரது படம் ஓடுவதற்கு வாய்ப்புகள் உள்ளன. காரணம் அவர் இப்போது உலக அளவில் கவனிக்கப்படும் ஹீரோ ஆகிவிட்டார். மற்ற தோல்விப்படங்கள்..??!! ( அது பத்தி நமக்கு தெரியாதுங்க..நம்ம ஊருல சந்திரன் வேறங்க..)

Tags

Next Story