'பொன்னியின் செல்வன்': மூன்று நாட்களில் வசூலில் உலக சாதனை

பொன்னியின் செல்வன்:  மூன்று நாட்களில் வசூலில் உலக சாதனை
X
இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில்உருவாகி உலகெங்கும், வெற்றிநடைபோட்டுவரும் 'பொன்னியின்செல்வன்' வசூலில் சாதனையைத் தொடர்கிறது.

கல்கி எழுதிய 5 பாகங்கள் கொண்ட வரலாற்றுப் புதினமான பொன்னியின் செல்வனை, இயக்குநர் மணிரத்தினம் இரண்டு பாகங்கள் கொண்ட திரைப்படமாக எடுத்துள்ளார். 'பொன்னியின் செல்வன்' படத்தை மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸும் லைகா நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளது. இப்படத்திற்கு ஏ.ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். நடிகர்கள் விக்ரம், கார்த்தி, பிரபு, ஜெயராம், ஜெயம் ரவி மற்றும் நடிகைகள் திரிஷா, ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட முன்னணி நடிக, நடிகையர்கள் பிரதான காதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம்,மலையாளம் என 5 மொழிகளில் வெளியான இப்படத்தை உலகின் ஒட்டுமொத்த ரசிகர்களும் கொண்டாடி வருகின்றனர்.

இயக்குனர் மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன்: பார்ட் 1 மூன்று நாட்களில் உலகம் முழுவதும் பாக்ஸ் ஆபிஸில் ரூ 230 கோடியைத் தாண்டியது. இப்படம் தமிழகம் மற்றும் சர்வதேச சந்தைகளில் சிறப்பான வசூலை ஈட்டி வருகிறது. உண்மையில், பொன்னியின் செல்வன் வெளிநாடுகளில் பல வசூல் சாதனைகளை முறியடித்தது. பாக்ஸ் ஆபிஸில் பொன்னியின் செல்வன் முறியடித்த சாதனைகளின் பட்டியலை இங்கே தருகிறோம்.

பொன்னியின் செல்வன்: பாகம் 1 செப்டம்பர் 30 அன்று பல மொழிகளில் திரையரங்குகளில் வந்தது. இப்படம் பாக்ஸ் ஆபிஸில் சிறப்பாக உள்ளது.


இயக்குனர் மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் மூன்று நாட்களில் பாக்ஸ் ஆபிஸில் ரூ.230 கோடி வசூலித்தது. இப்படம் தமிழிலும், வெளிநாடுகளிலும் நல்ல வசூலை குவித்து வருகிறது. அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளில் வேறு எந்த தமிழ் திரைப்படத்திற்கும் இல்லாத வகையில், தொடக்க வார இறுதியில் நல்ல வசூலை தந்துள்ளது. பொன்னியின் செல்வன் அமெரிக்காவில் 4 மில்லியன் டாலர் வசூல் செய்து நம்பர் 1 இடத்தைப் பிடித்தது.

அமெரிக்கா மட்டுமின்றி, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், மலேசியா, சிங்கப்பூர் மற்றும் இலங்கையிலும் பொன்னியின் செல்வன் வசூலை குவித்து வருகிறது. உலகம் முழுவதும் உள்ள அனைத்து ஐமேக்ஸ் திரையரங்குகளிலும் இப்படம் சாதனை படைத்தது.

பொன்னியின் செல்வன் சம்பாதித்த 230 கோடியில் கிட்டத்தட்ட 110-120 கோடி ரூபாய் வெளிநாட்டு மார்க்கெட்டில் இருந்து வந்தது. பொன்னியின் செல்வனுக்கு முன் ரஜினியின் 2.0 தான் இப்படி இருந்தது. ஆனால், ரஜினியின் 2.0. 700 கோடிக்கு மேல் சம்பாதித்தது அதுவும் தெலுங்கிலும் ஹிந்தியிலும் படம் நல்ல வசூலை ஈட்டியது. தமிழ் பதிப்பில் பொன்னியின் செல்வன் வசூல் அதிகமாக இருந்தாலும், தெலுங்கு மற்றும் ஹிந்தி பதிப்புகளில் பங்களிப்பு குறைவாகவே இருக்கும். பொன்னியின் செல்வன் தமிழ்நாட்டின் மிகப்பெரிய வெற்றி என்று சொல்லலாம்.

இந்தநிலையில், செப்டம்பர் 30-ம் தேதி வெளியான 'பொன்னியின் செல்வன்' திரைப்படம் உலகெங்கும் வெளியாகி மூன்று நாட்களாகி உள்ள நிலையில், படத்தின் வசூல் இதுவரை சுமார் 230 கோடியைக் கடந்துள்ளது. பிளாக்பஸ்டரை நோக்கி சென்று கொண்டிருக்கும் இப்படம் இன்று(03/10/2022) 250 கோடி ரூபாய் வசூலை எட்டிவிடும் என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

தொடர்ந்து தசரா விடுமுறை தினம் என்பதால், 'பொன்னியின் செல்வன்' படம் பாக்ஸ் ஆபீஸில் பல சாதனைகளை முறியடிக்க உள்ளதற்கான முன்னேற்ற வசூல் இது என்று கோலிவுட் வட்டாரம் முத்தாய்ப்புச் செய்தியை முன் வைக்கிறது.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!