/* */

குட்டி கிருஷ்ணர்களாக நயன்தாரா மகன்கள்: வைரலான புகைப்படம்

கிருஷ்ண ஜெயந்தி முன்னிட்டு எங்கள் வீட்டின் க்யூட் லிட்டில் கிருஷ்ணர்கள் என நயன்தாரா பகிர்ந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது.

HIGHLIGHTS

குட்டி கிருஷ்ணர்களாக நயன்தாரா மகன்கள்: வைரலான புகைப்படம்
X

குட்டி கிருஷ்ணர்களாக தவழ்ந்து செல்லும் நயன்தாரா குழந்தைகள் 

சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் இணைந்த தென்னிந்திய திரையுலகின் லேடி சூப்பர் ஸ்டாரான நயன்தாரா உயிர் ருத்ரோ நீல் மற்றும் உலக் தெய்வக் என தங்கள் குழந்தைகளுக்குப் பெயரிட்டுள்ள தங்கள் குழந்தைகளின் புகைப்படங்களை இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர்.

தனது இரு குழந்தைகளுடன் செம மாஸாக ஜெயிலர் பட பாடலுடன் ரீல்ஸ் வெளியிட்டு இருந்தார். அதன் பின்னர், அட்லி இயக்கத்தில் ஷாருக்கானுடன் தான் இணைந்து நடித்த ஜவான் படத்தின் தமிழ் மற்றும் இந்தி ட்ரெய்லர்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு புரோமொட் செய்திருந்தார்.

மேலும், தனது கணவர் விக்னேஷ் சிவன், ஷாருக்கான் மற்றும் ஷாருக்கானின் மகள் சுகானா கானுடன் திருப்பதி கோயிலுக்கு சென்றிருந்தார் நயன்தாரா. நடிகர் ஷாருக்கானுடன் திருப்பதி கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்த வீடியோ காட்சிகளும் வெளியாகி ரசிகர்களை மட்டுமின்றி ஒட்டுமொத்த திரையுலகையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தின.

சமீபத்தில் ஓணம் கொண்டாட்டத்தை முன்னிட்டு தனது இரு குழந்தைகளும் வாழை இலையில் அமர்ந்து உணவு உண்ணும் புகைப்படத்தை வெளியிட்டு இருந்தார்.

இந்நிலையில், தற்போது கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு தனது குழந்தைகள் உயிர் மற்றும் உலக் ஆகியோர் பட்டு வேட்டி அணிந்து கொண்டு குட்டி கிருஷ்ணர்களாக அலங்கரிக்கப்பட்டு பூஜை அறைக்கு தவழ்ந்து செல்லும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு ரசிகர்களுக்கு கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துக்களை நயன்தாரா கூறியுள்ளார்.

எங்கள் வீட்டு கிருஷ்ணன்கள்... அத்தகைய ஒரு பாக்கியம் #கிருஷ்ணஜெயந்தி மிக அழகான, ஆசீர்வதிக்கப்பட்ட தருணங்களுடன்! என பதிவிட்டுள்ளார்.

Updated On: 7 Sep 2023 4:11 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    புத்தாண்டு நல்வாழ்த்துகள்: வாழ்க்கையை வண்ணமயமாக்கும் பொன்மொழிகள்
  2. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் இரண்டு மணி நேரம் கொட்டிய கனமழை
  3. வீடியோ
    நாடாளுமன்றத்துக்கு வந்தது புதிய படை!அப்படி என்ன சிறப்பு ! || #crpf...
  4. லைஃப்ஸ்டைல்
    அறுபதாம் அகவை வாழ்த்துக்கள்: ஒரு புதிய அத்தியாயத்தின் ஆரம்பம்
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பு வாழும் கூடு..! புதுமனை புகுவிழா வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் இனிய பாடலுக்கு இதயப்பூர்வமான வாழ்த்துகள்
  7. குமாரபாளையம்
    சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு
  8. ஈரோடு
    சென்னிமலையில் வீடுகளுக்குள் புகுந்த மழை வெள்ளம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    சுருங்க சொல்லி விளங்க வைக்கிறேன்..! SMS பிறந்தநாள் வாழ்த்து..!
  10. குமாரபாளையம்
    அரசு அனுமதியின்றி செயல்பட்ட பார் மூடல்; கலெக்டர் உத்தரவு