பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 வெற்றி சீரியல் ஆகுமா?

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 வெற்றி சீரியல் ஆகுமா?
X

pandian stores mullai-பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 (கோப்பு படம்)

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் முடிவடைந்து இதன் இரண்டாவது பாகம் தொடங்கி ஓடிக்கொண்டிருக்கிறது.

Pandian Stores Mullai

பாண்டியன் ஸ்டோர்ஸ் முதல் சீசனில் இருந்த ஒரு சில நடிகர்கள் மட்டும்தான் இரண்டாவது சீசனிலும் தொடர்கின்றனர்.

இந்த நிலையில் ஒரு சில நடிகர்கள் மீண்டும் இரண்டாவது சீசனில் நடிக்காத காரணம் என்ன என்பது பற்றி சில தகவல்கள் இணையத்தில் பரவி வருகிறது. அது பற்றி பார்க்கலாம். விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு என்று அதிகமான ரசிகர்கள் இருக்கின்றனர். இந்த சீரியல் இதுவரைக்கும் விஜய் டிவியில் எந்த சீரியலும் செய்யாத சாதனையை செய்து காட்டி இருக்கிறது.

Pandian Stores Mullai

அதாவது 5 வருடங்களாக விஜய் டிவியில் எந்த சீரியலும் ஒளிபரப்பாகி வரவில்லை. இந்த நிலையில் அந்த வரிசையில் முதல் சீரியலாக பாண்டியன் ஸ்டோர்ஸ் இடம் பிடித்திருக்கிறது. அதே நேரத்தில் இந்த சீரியல் ஆரம்பத்திலிருந்து டிஆர்பியில் டாப் 10 இடங்களுக்குள் வந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. அதே நேரத்தில் இந்த சீரியலின் வெற்றிக்கு இந்த சீரியலில் சில குறிப்பிட்ட கேரக்டர்கள் ரசிகர்கள் மத்தியில் அதிகமான வரவேற்பை பெற்றிருந்தது. அதில் கதிர் முல்லை ஜோடிக்கு எப்போதுமே அதிகமான வரவேற்பு இருந்தது. ஆரம்பத்திலேயே இந்த சீரியலில் முல்லை கேரக்டரில் நடிகை விஜே சித்ரா நடித்து ரசிகர்கள் மத்தியில் முல்லையாக பதிந்துவிட்டார்.

ஆனால் அவருடைய திடீர் இறப்பால் அனைத்து ரசிகர்களும் வருத்தத்தில் இருந்தனர். அதைத் தொடர்ந்து தொடர்ச்சியாக ஒரு சில நடிகைகள் முல்லையாக நடித்து வந்தனர். இந்த நிலையில் சமீபத்தில் இந்த சீரியல் கதையில் சுவாரஸ்யம் குறைய தொடங்கியது என்று ரசிகர்கள் தொடர்ச்சியாக கருத்து தெரிவித்து வந்தனர் இந்த நிலையிலேயே இந்த சீரியல் முதல் பாகம் முடிவடைந்து அதைத்தொடர்ந்து இரண்டாவது சீசன் தொடங்கியாச்சு.

Pandian Stores Mullai

அதற்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. இந்த நிலையில் இந்த சீரியல் பற்றி சில தகவல்கள் பரவி வருகிறது. அதாவது இரண்டாவது சீசனில் நடிகர் ஸ்டாலின்( மூர்த்தி) மற்றும் ஹேமா(மீனா) ஹேமாவின் அப்பாவாக நடித்தவர் என ஒரு சிலர் மட்டும்தான் இரண்டாவது பாகத்தில் தொடர்கிறார்கள். மற்றவர்கள் இந்த சீரியல் தொடரவில்லை என்று கூறப்படுகிறது. ஏற்கனவே இந்த சீரியலில் கண்ணனாக நடித்து வந்த சரவணன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கிறார். அதனால் அவர் இப்போது இரண்டாவது சீசனின் சூட்டிங் கலந்து கொள்ள முடியாது.

அதுபோல ஜீவா கேரக்டரில் நடித்து வந்த நடிகர் வெங்கட் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கிழக்கு வாசல் என்ற சீரியலில் நடித்து வருகிறார். இதனால் அவரும் இந்த சீரியலில் நடிக்க வாய்ப்பு இல்லை என்று கூறப்படுகிறது. அதை தொடர்ந்து மீதமுள்ள ஒரு சிலர் ஏற்கனவே சேனல் தரப்பினரிடம் தாங்கள் பிஸியாக இருக்கிறோம் வெப்சீரிஸில் வாய்ப்பு வந்துவிட்டது என்றெல்லாம் கூறி இருந்தார்களாம். அதனாலேயே இவர்கள் இரண்டாவது சீசனில் தொடரவில்லை என்ற பேச்சு அடிபடுகிறது.

ஏற்கனவே சில மாதங்களுக்கு முன்பு இந்த சீரியலில் கதிராக நடிக்கும் குமரன் மற்றும் தனம் கேரக்டரில் நடித்து வரும் சுஜிதா இருவரும் இந்த சீரியலில் இருந்து விலகப் போவதாகவும் சில செய்திகள் வைரலானது. சேனல் தரப்பினரிடம் சம்பள விஷயத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாடால் இவர்கள் இந்த முடிவு எடுத்ததாக கூறப்பட்டது.

Pandian Stores Mullai

ஆனால் இவர்கள் தங்களுடைய தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வமான எந்த தகவலையும் கூறவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இவர்கள் இருவரும் இரண்டாவது பாகத்தில் தொடராததுக்கு காரணம் ஏற்கனவே ஏற்பட்ட சண்டை தான் என்றும் செய்திகள் வலம் வருகிறது.

அதுபோல ஏற்கனவே ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மூர்த்தியின் தம்பிகளை பற்றிய கதையாக இருக்கும் நிலையில் இப்போது சீசன் இரண்டில் தன்னுடைய மகன்கள் என்று அது போலவே மூன்று பேரோடு மூர்த்தி அமர்ந்திருப்பதை வைத்து இப்போது மீம்ஸ்கள் வைரலாகி வருகிறது.

Pandian Stores Mullai

ஏற்கனவே பாரதி கண்ணம்மா சீசன் 2 , மௌனராகம் சீசன் 2 என தொடங்கி பெரிய அளவில் வெற்றி அடையாமல் போனது போல இதுவும் ஆகிற கூடாது என்று இப்போது சிலர் அறிவுரைகளையும் கூறி வருகின்றனர். ஆனால் கதை என்ன மாதிரி போகப் போகிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

Tags

Next Story