நடிகைகள் நித்யா மேனnன், பார்வதி நாயர் கர்ப்பம்?: ரசிகர்கள் ஷாக்

நடிகைகள் நித்யா மேனnன், பார்வதி நாயர் கர்ப்பம்?: ரசிகர்கள் ஷாக்
X

வொண்டர் வுமன் பட விளம்பரம் 

நித்யா மேனன், பார்வதி நாயர் உள்ளிட்ட நடிகைகள் தங்கள் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவரவர், ப்ரக்னன்சி புகைப்படத்தைப் பதிவிட்டுள்ளனர்

அண்மையில் நடிகை நித்யா மேனன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு புகைப்படத்தைப் பகிர்ந்திருந்தார். அந்தப் புகைப்படத்தைப் பார்த்த அவரது ரசிகர்களும் அவரது நலம் விரும்பிகளும் அதிர்ச்சி அடைந்தனர். அப்படி என்னதான் இருந்தது அந்தப் புகைப்படத்தில்? வேறொன்றுமில்லை. அப்புகைப்படத்தில், நடிகை நித்யா மேனன், பாஸிட்டிவ் என காட்டும் ப்ரக்னன்ஸி கார்டையும் குழந்தைக்கான நிப்பிளையும் ஷேர் செய்திருந்தார். மேலும் அதியசங்கள் ஆரம்பிக்கிறது என்று கேப்ஷன் வேறு கொடுத்துள்ளார்.

நடிகை நித்யாமேனனின் இந்தப் பதிவுதான் அனைவரையும் அதிர வைத்தது. அதேநேரம், நித்யா மேனன் போட்ட பதிவின் கீழே பின்னோட்டமிட்ட ஒரு சிலர், உங்களுக்கு திருமணம் ஆகி விட்டதா என்று கேட்டு வருகின்றனர். இன்னும் சிலர் வாழ்த்துகளையும் தெரிவித்து வருகின்றனர்.


நடிகை நித்யா மேனன், 'ஹனுமான்' படத்தில் குழந்தை நட்சத்திரமாகத் திரையுலகில் அறிமுகமானார். இதனையடுத்து, 2008ம் ஆண்டு வெளியான, 'ஆகாஷ கோபுரம்' படம் மூலம் நாயகியாக அறிமுகமானார். தமிழில் 'வெப்பம்' என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். அதன்பிறகு, 'காஞ்சனா', 'மெர்சல்', 'ஓ காதல் கண்மணி', '180 டிகிரி' உள்ளிட்ட படங்களில் இவரின் சிறப்பான நடிப்பால், பாராட்டை பெற்றார். சமீபத்தில் இவர் நடித்த சைக்கோ மற்றும் திருச்சிற்றம்பலம் படம் பெரும் வரவேற்பினை பெற்றது. இவர் தமிழில் கடைசியாக, 'திருச்சிற்றம்பலம்' படத்தில் நடித்திருந்தார். இந்தப் படத்தை பார்த்த பல இளசுகளும் எனக்கும் நித்யா மேனன் போல ஒரு பெஸ்டி வேண்டும் என்று அடம்பிடிக்கத் தொடங்கி விட்டனர்.

குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகையாக வலம் வரத் தொடங்கிய நடிகை நித்யா மேனன் நடிக்கும் படங்களில் எல்லாம் நித்யா மேனனின் பாத்திரங்கள் தனித்துவத்துடன் வடிவமைக்கப்பட்டிருக்கும். பான் இந்தியா ஸ்டாராகி உள்ள நித்யா மேனன் நேற்று முன்தினம் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை பதற வைத்தார். அதில், பிரக்னன்சி பாசிட்டிவ் கிட் போட்டோவை ஷேர் செய்திருந்தார். இதை பார்த்த ரசிகர்கள் என்னது கர்ப்பமா இருக்கீங்களா? திருமணம் ஆகாமல் குழந்தையா? என்றெல்லாம் கமெண்ட்டுகளை பதிவிட்டனர்.

மேலும், நடிகைகள் பார்வதி நாயர், பத்மபிரியா, அர்ச்சனா பத்மினி உள்ளிட்ட பலரும் நித்தியா மேனன் வெளியிட்ட அதே கர்ப்பம் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டனர். அதன்பிறகுதான் இவர்கள் கர்ப்பமாக இல்லை ஏதோ விளம்பரத்திற்காக இவ்வாறு பதிவிட்டுள்ளார்கள் என்று தெரிய வந்ததும் ரசிகர்கள் நிம்மதிப் பெரு மூச்சுவிட்டனர்.


இந்நிலையில் நித்யா மேனனின் கர்ப்பத்திற்கு காரணம் இயக்குநர் அஞ்சலி மேனன் என்பது தற்போது தெரியவந்துள்ளது. அஞ்சலி மேனன் இயக்கத்தில் நித்யா மேனன், பார்வதி உள்ளிட்டோர் நடித்திருக்கும் படம், 'wonder women'. கர்ப்பமாக இருக்கும் சில பெண்களை மையப்படுத்தி இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. கேரள மாநிலம் கோழிக்கோட்டில்தான் படப்பிடிப்பு நடந்தது. அந்தப் படத்தை வித்தியாசமான முறையில் விளம்பரம் செய்யவே இப்படி பிரக்னன்சி கிட் புகைப்படத்தை அப்படத்தில் நடித்த நடிகைகள் இப்படி பொய்யான புகைப்படத்தினை வெளியிட்டு அனைரையும் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!