ஒருநாள் லேட்டா வந்து 'அண்ணாத்தே' டப்பிங் பேசறார் சூப்பர் ஸ்டார் ரஜினி..!

நடிகா் ரஜினிகாந்த்
நடிகா் ரஜினிகாந்த் அமெரிக்காவிலிருந்து புறப்பட்டு, இன்று அதிகாலை சென்னை வருவதாக கூறப்பட்டிருந்தது. தற்போது அது ஒரு நாள் தாமதமாகியுள்ளது.
நடிகர் ரஜினிகாந்த்திற்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சிறுநீரகப் பிரச்னை ஏற்பட்டது. இதனையடுத்து சிங்கப்பூர் சென்ற அவர், அங்குள்ள மருத்துவமனையில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்டார். தொடர்ந்து ஆண்டுக்கு ஒருமுறை அமெரிக்கா சென்று மருத்துவப் பரிசோதனை மேற்கொண்டு வருவதை ரஜினிகாந்த் வழக்கமாக வைத்துள்ளார்.
கொரோனா பரவல் காரணமாக இந்த ஆண்டு தாமதமாக கடந்த ஜூன் 19 ம் தேதி அமெரிக்கா புறப்பட்டு சென்றார் ரஜினி. சென்னையில் இருந்து மத்திய அரசின் அனுமதியுடன் தனி விமானத்தில் அமெரிக்கா சென்றார். அவரது மனைவி லதா ரஜினிகாந்த் உடன் சென்றார். இந்நிலையில் சிகிச்சை முடிந்து நடிகர் ரஜினிகாந்த் இன்று அதிகாலை சென்னை திரும்ப உள்ளார் என தெரிவிக்கப்பட்டது. தற்போது அது ஒரு நாள் தாமதமாகியுள்ளது. சென்னை திரும்பியவுடன் சில நாட்கள் ஓய்வு எடுத்துக்கொண்டு அண்ணாத்த டப்பிங் பணிகளில் கலந்துகொள்வார் என தெரிகிறது.
Tags
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu