மஞ்சு வாரியரின் மகளை பாருங்க! அச்சு அசல் அம்மாவை போலவே
நடிகர் அஜித் நடித்த துணிவு திரைப்படம் கடந்த 11ஆம் தேதி வெளியானது. இப்படத்தை எச் வினோத் இயக்கியிருந்தார். மேலும் ரெட் ஜென்ட்ஸ் நிறுவனம் திரையரங்குகளில் வெளியிட்டது. இந்தப் படத்தில் கதாநாயகியாக மலையாள நடிகை மஞ்சு வாரியர் நடித்திருந்தார்.
மேலும் இப்படத்தில் சமுத்திரக்கனி, சதிஷ், பாவனி, அமீர் போன்றவர்கள் நடித்திருந்தார். இதனை தொடர்ந்து தமிழில் மஞ்சு வாரியருக்கு தமிழில் பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளன.
இவர் தமிழில் அவ்வளவு பிரபலமான நடிகை இல்லை என்றாலும், மலையாள திரைப்பட உலகில் மிகப் பிரபலமான நடிகையாக திகழ்ந்து வருகிறார்.
அதுமட்டும் இல்லாமல் இவரை மலையாள திரை உலகில் 'லேடி சூப்பர் ஸ்டார்' என்று தான் அழைப்பார்கள். ஆரம்பத்தில் நடிகை மஞ்சு வாரியர் அவர்கள் விளம்பரப் படங்களில் தான் நடித்து இருந்தார். அதற்கு பிறகு மலையாளத்தில் 1995 ஆம் ஆண்டு வெளியான 'சாக்ஷியம்' என்ற படம் மூலம் சினிமா உலகில் அறிமுகமானார். அதன் பின்னர் மலையாளத்தில் பல்வேறு படங்களில் நடித்து இருக்கிறார்.
மலையாள திரையுலகில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் மஞ்சு வாரியர். இவர் தமிழில் தனுஷ் நடிப்பில் வெளிவந்த அசுரன் படத்தின் மூலம் அறிமுகமானார்.
இப்படம் தமிழில் இவருக்கு நல்ல வரவேற்பை தேடி தந்தது. இதை தொடர்ந்து தற்போது அஜித் நடிப்பில் வெளிவந்த துணிவு படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். இப்படம் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வருகிறது.
மலையாள நடிகர் திலீப்பும், நடிகை மஞ்சு வாரியரும் ஒருவருக்கொருவர் காதலித்து வந்தார்கள். பின் இருவரும் 1998 ஆம் ஆண்டு காதல் திருமணம் செய்து இருந்தார்கள். இவர்கள் இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பரஸ்பரம் விவாகரத்து பெற்று பிரிந்தனர். இவர்களுக்கு மீனாட்சி என்ற ஒரு மகள் இருக்கிறார்.
பல ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்து வந்த இவர்கள் கடந்த 2015ம் ஆண்டு விவாகரத்து பெற்றுக்கொண்டு பிரிந்துவிட்டனர். இந்நிலையில், நடிகை மஞ்சு வாரியரின் மகளான மீனாட்சியின் சமீபத்திய புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது.
மஞ்சு வாரியரின் மகள் புகைப்படங்கள் தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள் "துணிவு" படத்தில் நடித்த மஞ்சு வாரியருக்கு இவ்வளவு பெரிய அழகான மகளா என கமெண்ட் செய்து வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu