மலையாள நகைச்சுவை நடிகை சுபி சுரேஷ் கல்லீரல் நோயால் காலமானார்

மலையாள நகைச்சுவை நடிகை சுபி சுரேஷ் கல்லீரல் நோயால் காலமானார்
X

மலையாள நடிகை சுபி சுரேஷ்.(கோப்பு படம்)

மலையாளம் நகைச்சுவை நடிகையும் தொலைக்காட்சி தொகுப்பாளருமான சுபி சுரேஷ், கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்டு காலமானார்.

மலையாளம் காமெடி நடிகையும், டிவி தொகுப்பாளினியுமான சுபி சுரேஷ் தனது 41 வது வயதில் இறந்தார். அவர் கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்டு கொச்சியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.


மலையாள நடிகரும், தொலைக்காட்சி தொகுப்பாளருமான சுபி சுரேஷ், கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்டு, கொச்சியில் இன்று காலமானார். அவருக்கு வயது 41. சுபி, கல்லீரல் பாதிப்பு ஏற்பட்டு கேரள மாநிலம் கொச்சியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வந்தார்.


சுபியின் நண்பரும் நகைச்சுவை நடிகருமான டினி டாம் கூறும்போது “அவர் (சுபி) கடந்த சில நாட்களாக ஐசியூவில் இருந்தார். கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்யவிருந்தார். அரசியல் மற்றும் சமூக ஆர்வலர்களின் உதவியுடன் அறுவை சிகிச்சை செய்வதற்கான அனைத்தையும் விரைவுபடுத்தி செய்துவந்தோம். இருப்பினும், சுபியின் உடல்நிலை மோசமடைந்ததால், மறுநாள் வென்டிலேட்டருக்கு மாற்றப்பட்டார். நாங்கள் எங்களால் முடிந்ததைச் செய்தோம், ஆனால் பயனில்லாமல் போய்விட்டது என்றார் கவலையுடன்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!