AK 62 Update: சத்தமில்லாமல் நடந்த ஏகே 62 பட பூஜை: இயக்குநர் யார்?

AK 62 Update: சத்தமில்லாமல் நடந்த ஏகே 62 பட பூஜை: இயக்குநர் யார்?
X

ajith latest news-நடிகர் அஜீத்குமார்

நடிகர் அஜித்தின் ஏகே.62 படத்தை மகிழ் திருமேனி இயக்குவது உறுதியாகிவிட்டது. இதை படக்குழுவை சேர்ந்த ஒருவர் உறுதி செய்திருக்கிறார்

அஜித் நடிப்பில் 'துணிவு' திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ஏகே62-வது படத்தில் அஜித் இணைய உள்ளார் என கூறப்பட்டது.

லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். ஏகே 62 படத்தில் நடிகர்கள் அரவிந்த சாமி மற்றும் சந்தானம் நடிக்கவுள்ளதாகவும் இதன் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்கப்படவுள்ளதாகவும் தகவல் வெளியானது.

இந்நிலையில், ஏகே62 படத்திலிருந்து இயக்குனர் விக்னேஷ் சிவன் விலகியதாகவும், விக்னேஷ் சிவனுக்கு பதிலாக 'தடம்', 'மீகாமன்', 'கலகத்தலைவன்' போன்ற படங்களை இயக்கிய மகிழ்திருமேனி இந்த படத்தை இயக்கவுள்ளதாகவும் செய்திகள் வெளியானது

இதற்காகமகிழ் திருமேனி லண்டன் சென்று லைகா தயாரிப்பு நிறுவனத்திடம் கதையை கூறி ஒப்புதல் பெற்றதாக கூறப்படுகிறது. அஜித்தும் கதைக்கு ஒப்புதல் தெரிவித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. தற்போது ஏ.கே. 62 படத்தில் அஜித் குமாருக்கு வில்லனாக அருண் விஜய் நடிப்பார் என்று பேச்சு கிளம்பியிருக்கிறது.

முன்னதாக கவுதம் மேனன் இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான என்னை அறிந்தால் படத்தில் அவருக்கு வில்லனாக நடித்து ரசிகர்களின் கதைட்டல்களை பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் ஏ.கே. 62 பட வில்லன் மற்றும் ஹீரோயினை இன்னும் உறுதி செய்யவில்லை என்று கூறப்படுகிறது.

இந்த படத்திற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், லைகா நிறுவனம் தயாரிக்கும் ஏ.கே. 62 படத்தின் பூஜை நேற்று நடந்திருக்கிறது. நடிகர் அஜித்தின் அலுவலகத்தில் பூஜையை எளிமையாக நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

பூஜை முடிந்துவிட்டாலும் படப்பிடிப்பு அடுத்த மாதம் தான் துவங்குமாம். தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டரும் மார்ச் மாதம் முதல் வாரத்தில் வெளியிடப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. ஏகே.62 படத்தை மகிழ் திருமேனி இயக்குவது உறுதியாகிவிட்டது என படக்குழுவை சேர்ந்த ஒருவர் உறுதி செய்திருக்கிறார்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!