துணிவு, வாரிசு படங்களை இணையதளங்களில் சட்டவிரோதமாக வெளியிட தடை.. சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு...

Thunivu Ticket Booking
X

Thunivu Ticket Booking

துணிவு மற்றும் வாரிசு திரைப்படங்களை சட்ட விரோதமாக இணையதளங்களில் வெளியிட சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்து இன்று உத்தரவிட்டுள்ளது.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள துணிவு திரைப்படமும், வம்சி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படமும் நாளை ஒரே நாளில் வெளியாகிறது. தமிழகத்தில் உள்ள அனைத்து திரையரங்களுகளிலும் இந்த இரு திரைப்படங்கள் மட்டுமே திரையிடப்படும் சூழல் உருவாகி உள்ளது. தமிழ் திரைஉலகின் இரு முன்னணி நடிகர்களின் திரைப்படமும் ஒரே நாளில் வெளியாவது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், இரு படங்களையும் சட்ட விரோதமாக இணைய தளங்களில் வெளியிட தடை விதிக்க கோரி தயாரிப்பு நிறுவனங்கள் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அந்த மனுக்கள் நீதிபதி சரவணன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர்கள் தரப்பில் வழக்கறிஞர் விஜயன் சுப்பிரமணியன் ஆஜராகி, இரண்டு படங்களும் பெரும் பொருட்செலவில் தயாரிக்கப்பட்டு உள்ளதாகவும், இரண்டு படங்களுக்கும் மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு உள்ளதாகவும் தெரிவிதார்.

மேலும், துணிவு மற்றும் வாரிசு திரைப்படங்களை சட்ட விரோதமாக இணையதளங்களில் வெளியிடப்பட்டால் பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தும் என்பதால்

வாரிசு படத்தை சட்ட விரோதமாக வெளியிட 4,548 இணையதள பக்கங்களுக்கும், துணிவு படத்தை 2,754 இணையதள பக்கங்களுக்கும் தடை விதிக்க வேண்டும் என வழக்கறிஞர் சுப்பிரமணியன் கேட்டுக்கொண்டார்.

இதைத்தொடர்ந்து, வழக்கறிஞரின் வாதங்களை ஏற்றுக்கொண்ட நீதிபதி சரவணன், துணிவு மற்றும் வாரிசு திரைபடங்களை இணையதளங்களில் சட்ட விரோதமாக வெளியிட தடை விதித்து உத்தரவிட்டார். அதிக பொருட்செலவில் தயாரிக்கப்படும் திரைப்படங்களின் தயாரிப்பாளர்கள் படம் வெளியாவதற்கு முன்பு நீதிமன்றம் மூலம் இதுபோன்ற உத்தரவை பெறுவது வழக்கமான ஒன்றாகிவிட்டது.

Tags

Next Story
Weight Loss Tips In Tamil