kushboo daughters-நடிகை குஷ்பூ மகள்கள் இப்போ என்ன செய்றாங்க தெரியுமா..?

kushboo daughters-நடிகை குஷ்பூ மகள்கள் இப்போ என்ன செய்றாங்க தெரியுமா..?
X

kushboo daughters-இயக்குனர் சுந்தர்.சி மற்றும் நடிகை குஷ்பூ அவர்களின் மகள்களுடன்.

kushboo daughters-90களின் கனவுக்கன்னியாக திரையுலகில் வலம் வந்தவர் நடிகை குஷ்பூ. எக்கச்சக்க ரசிகர்களை கவர்ந்தவர்.

kushboo daughters-கோலிவுட்டில் மிக பிரபலமான நடிகை குஷ்பு மும்பையில் ஒரு முஸ்லீம் குடும்பத்தில் பிறந்தார். அவரது பெற்றோர் வைத்திருந்த இயற் பெயர் நக்கத் கான். சினிமாவில் நடிப்பதற்கு வந்தவுடன் அவரது பெயர் குஷ்பூ என்றானது. அவர் இயக்குனர் சுந்தர்.சியை திருமணம் செய்து கொள்வதற்காக இந்து மதத்திற்கு மாறினார். திருமணத்துக்குப் பின்னர் நடிகை தனது பெயரை குஷ்பு சுந்தர் என்று அழைக்கப்பட்டு வருகிறார்.


சமூக வலைதளங்களில் மட்டுமல்லாமல் அரசியலிலும் ஆக்டிவாக இருந்தவர் நடிகை குஷ்பு. சமீபத்திய அவரது டுவிட்டர் பதிவு ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது. இந்தியா சினிமாவில் எந்த நடிகைக்கும் கிடைக்காத பெருமைக்கு உரியவர் நடிகை குஷ்பூ. ஆமாம் தமிழகத்தில் தமிழ் ரசிகர்கள் அவருக்கு கோவிலே காட்டியுள்ளனர் என்றால் அவரது பெருமை எந்த அளவு உயர்ந்து இருந்தது என்பதை நாம் அறிந்துகொள்ள முடியும். இன்றளவும் குஷ்பூவுக்கு ஏராளமான ரசிகர் பட்டாளம் உள்ளனர்.


சினிமாவுக்குப்பின்னர் சின்னத்திரையிலும் அவர் நடித்து ரசிகர்களை குஷிப்படுத்தினார். எதையும் தைரியமாக பேசும் குணம் கொண்டவர். அதனால் அரசியல் ஆர்வம் ஏற்பட்டு தொடக்கத்தில் திமுகவில் இணைந்தார். பின்னர் காங்கிரஸ் கட்சியில் தேசிய அளவிலான பொறுப்பில் இருந்தார். பின்னர் அங்கிருந்து விலகி தற்போது வரை பாஜகவில் இருக்கிறார், ஆனாலும் முன்பிருந்த அரசியல் வேகம் அவரிடம் குறைந்துள்ளது.


kushboo daughters

குஷ்பூ சுந்தருக்கு 2 மகள்கள் உள்ளனர். அவந்திகா மற்றும் ஆனந்திதா என இரண்டு மகள்கள். குஷ்புவின் மகள் ஆனந்திதா ஒரு பிரபலமான வீடியோ பகிர்வு தளத்தில் தனது சொந்த சேனலைத் தொடங்கியுள்ளார். மேலும் அவரது சமீபத்திய இடுகையில், அவர் தனது சகோதரியை தனது சொந்த வாழ்க்கையை வாழ வைப்பது குறித்து ஆராய முடிவு செய்துள்ளதாக பதிவிட்டிருந்தார். அவர்களின் சமீபத்திய வீடியோவில், அவந்திகாவும் ஆனந்திதாவும் அவர்கள் என்னென்ன சாப்பிடுகிறார்கள் என்பதையும் சகோதரிகளுக்கு இடையே உள்ள அன்பின் வெளிப்பாடுகளையும் அவர்களது குடும்ப அன்பையும் வெளிப்படுத்தினர்.


சமீபத்தில் குஷ்பூ வெளியிட்ட அவரது மக்கள் அவந்திகாவின் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலானது. காரணம் அவர் குட்டி குஷ்பூ போல அவரைப்போலவே உருவத்தில் உள்ளார்.

Tags

Next Story
AI மரங்களை நடவு செய்வதில் புரட்சி: சரியான இடத்தை எப்படி கண்டுபிடிப்பது?