கிருத்திகா உதயநிதியின் 'பேப்பர் ராக்கெட்'..!

கிருத்திகா உதயநிதியின் பேப்பர் ராக்கெட்..!
X
இயக்குநர் கிருத்திகா உதயநிதியின் ‘பேப்பர் ராக்கெட்' இணையத்தொடர் இந்த மாதம் 29-ல் ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகவிருக்கிறது.

தமிழ்த் திரையுலகின் முக்கிய இயக்குநர்களில் பலர் இணையத் தொடர்களிலும் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளார். அதில் பல தொடர்கள் ரசிகர்களிடையே பரவலான வரவேற்பைப் பெற்றதோடு மேலும் மேலும் பல்வேறு எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது என்பது அண்மைக்கால உதாரணங்கள் எனலாம்.

இந்தநிலையில், இயக்குநர் கிருத்திகா உதயநிதியும் இணையத் தொடரில் கவனம் செலுத்தியுள்ளார். அண்மையில் ஜீ5 நிறுவனம் தங்களது ஓடிடி தளத்தில் தளத்தில் வெளியிடவுள்ள 10 இணையத் தொடர்களுக்கான அறிவிப்பை வெளியிட்டது. இதில், இயக்குநர்கள் அமீர், வெற்றிமாறன், வசந்தபாலன், ஏ.எல்.விஜய், கிருத்திகா உதயநிதி உள்ளிட்ட முன்னணி இயக்குநர்களின் இயக்கத்தில் மற்றும் நடிப்பில் உருவாகும் இணையத் தொடர்களும் குறிப்பிடத்தக்கவை ஆகும்.

இந்த அறிவிப்பில்தான் இயக்குநர் கிருத்திகா உதயநிதியின் இயக்கத்தில் உருவாகியுள்ள 'பேப்பர் ராக்கெட்' என்ற இணையத் தொடரும் இடம் பெற்றுள்ளது. இந்த இணையத் தொடரில் காளிதாஸ் ஜெயராம், தன்யா ரவிச்சந்திரன், கே.ரேணுகா, கருணாகரன் உள்ளிட்டவர்களுடன் மேலும் பலரும் நடித்துள்ளனர்.

இந்த இணையத் தொடரின் இரண்டு பாடல்கள் சில மாதங்களுக்கு முன்பு வெளியானது. இதனைத் தொடர்ந்து தற்போது, 'பேப்பர் ராக்கெட்' இணையத் தொடரின் இசை மற்றும் ரிலீஸ் தேதியை ஜீ5 நிறுவனம் தங்களது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது.

அந்த அதிகாரபூர்வ அறிவிப்பின்படி, 'பேப்பர் ராக்கெட்' வருகிற 29-ம் தேதி ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகவிருக்கிறது. தரன் குமார் இசையமைத்துள்ள இத்தொடர் மொத்தம் 8 பாடல்களுடன் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியாகவுள்ளதால், இருமொழி ரசிகர்களிடையேயும் இரட்டிப்பு மகிழ்ச்சி மலர்ந்துள்ளது.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!