கவர்ச்சி காட்டிய கீர்த்தி சுரேஷ்: திக்குமுக்காடிய இளசுகள்

கவர்ச்சி காட்டிய கீர்த்தி சுரேஷ்: திக்குமுக்காடிய இளசுகள்
X
Keerthi Suresh Glamour-நடிகை கீர்த்தி சுரேஷ் பச்சை நிற கோட் அணிந்து, டீப் கவர்ச்சி காட்டியுள்ள புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது

Keerthi Suresh Glamour-தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக இடம் பிடித்திருக்கும் நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் உச்ச மார்க்கெட்டை பிடித்துள்ளார். 2000களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான இவர், 2013 ஆண்டில் கீதாஞ்சலி எனும் மலையாளத் திரைப்படத்தின் மூலமாக கதாநாயகியாக அறிமுகமானார்.

அதன் பிறகு கோலிவுட் சினிமாவில் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக இது என்ன மாயம் திரைப்படத்தில் நடித்து ஹீரோயினாக அறிமுகமானார். தொடர்ந்து ரஜினி முருகன், தொடரி, ரெமோ, பைரவா, சாமி 2, பென்குயின் உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

அவ்வப்போது திருமண சர்ச்சைகளில் சிக்கி கொள்ளும் கீர்த்தி சுரேஷ், இப்படிப்பட்ட வதந்திகளை காதில் கூட வாங்கி கொள்ளாமல், தொடர்ந்து தன்னுடைய திரைப்பட பணிகளில் கவனம் செலுத்தி வருகிறார். தற்போது இவரது கைவசம் மூன்று படங்கள் உள்ளன.

தமிழில் 'மாமன்னன்' படத்தில் உதயநிதிக்கு ஜோடியாக நடிக்கிறார். தெலுங்கில் 'வேதாளம்' படத்தின் ரீ-மேக்காக சிரஞ்சீவி நடிப்பில் உருவாகி வரும், 'போலா ஷங்கர்' என்கிற படத்தில், லட்சுமி மேனன் நடித்த, வேடத்தில் நடிக்க உள்ளார். அதே போல் நானிக்கு ஜோடியாக 'தசரா' என்கிற படத்தில் நடித்து வருகிறார்.

'மகாநடி' படத்தின் வெற்றிக்கு பிறகு, கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களை மட்டுமே அதிகம் தேர்வு செய்தார் கீர்த்தி சுரேஷ். அப்படி நடித்த படங்கள் தொடர் தோல்வியை சந்தித்ததால், மீண்டும் முன்னனி நடிகர்களுடன் நடிக்கும் வாய்ப்பை கைப்பற்றி நடித்து வருகிறார்.


எப்போதும் சமூக வலைத்தளத்தில் மிகவும் ஆக்ட்டிவாக இருக்கும் கீர்த்தி சுரேஷ், அவ்வப்போது தன்னுடைய அழகிய போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.

அந்த வகையில் தற்போது பாலிவுட் நடிகைகளுக்கே டஃப் கொடுக்கும் விதமாக, அதீத கவர்ச்சியில் கிளி பச்சை நிற கோட், கழுத்து நிறைய நகைகள் அணிந்து... டீப் கவர்ச்சி காட்டிய இவரது புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!