காமராஜருக்கு பாடல் மூலம் சேதி சொன்ன கண்ணதாசன்

காமராஜருக்கு பாடல் மூலம் சேதி சொன்ன கண்ணதாசன்
X
காமராஜருக்கு கண்ணதாசன் பாடல் மூலம் சேதி சொன்ன அற்பதமான தகவல் பற்றி படிக்கலாம்.

கண்ணதாசன் வீட்டில் அசைவம் சமைக்கப்பட்டால் காமராஜர் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்படும்.

இரவு நேரங்களில் இருவரும் சந்தித்தால் நேரம் போவதே தெரியாமல் பேசுவார்கள். நாகர்கோவில் தேர்தல் பிரசாரத்தை முன்னின்று நடத்தி வெற்றி தேடிக் கொடுத்தவர் கண்ணதாசன். கண்ணதாசன் மது அருந்துவார் என்பது அனைவருக்குமே தெரியும். ஆனால் “மது அருந்துபவர்கள் காங்கிரஸ் உறுப்பினர்களாக இருக்கக்கூடாது என்று காங்கிரஸ் கட்சி நிபந்தனை விதித்தது. அப்போது கண்ணதாசனை அழைத்துப் பேசினார் காமராஜர்.

கண்ணதாசா, இந்த சனியன் மதுவை விட்டுத் தொலை. இதனால உன்னைப் பத்தி தப்பாப் பேசுறாங்க பார் என்று கேட்டுக் கொண்டார். உடனே, கண்ணதாசன் எல்லோரும் சொல்வதுபோல, சினிமா உலக அவசரம், சிக்கல், வீட்டுப்பிரச்னை போன்றவற்றைச் சொல்லி, “அதுக்காத்தானே குடிக்கிறேன். அதுவும் பெர்மிட் வாங்கித் தானே குடிக்கிறேன் என்று சமாதானம் சொல்லிப் பார்த்தார்.

ஆனாலும் காமராஜர் விடுவதாக இல்லை. “அட.. விட்ருப்பா என்றார். யோசித்த கண்ணதாசன், “”சரி விட்டுர்றேன்… குடிக்கிறதை இல்லை. காங்கிரஸ் கட்சியை என்றபடி கிளம்பினார். காமராஜர் பெரிதாகச் சிரித்து தலை அசைத்தார்.

காமராஜருக்கும் கண்ணதாசனுக்கும் இருந்த உறவு அற்புதமானது. இது குறித்து கண்ணதாசன், காமராஜரை நான் தாயாகப் பார்த்தேன். தந்தையாகப் பார்த்தேன். தெய்வமாகப் பார்த்தேன். அதன் பிறகு தான் தலைவனாகப் பார்த்தேன் என்று மனமாரச் சொன்னவர்.

கவிஞர் கண்ணதாசன் காங்கிரசிலிருந்து விலகி திரும்பவும் காங்கிரசில் சேர எண்ணியபோது தலைவர் காமரசருக்கு திரைப்பாடல் மூலம் விட்ட செய்தி

அந்த சிவகாமி மகனிடம்

சேதி சொல்லடி என்னை

சேரும் நாள் பார்க்க சொல்லடி

வேறு எவரோடும் நான் பேச

வார்த்தை இல்லடி....

காமராசர் தாயார் பெயர் சிவகாமி

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!