ஈரோடு ரயில் எஞ்சினில் விக்ரம் படத்தின் விளம்பர போஸ்டர்

ஈரோடு ரயில் எஞ்சினில் விக்ரம் படத்தின் விளம்பர போஸ்டர்
X

ரயில் எஞ்சினில் ஒட்பப்பட்டுள்ள விக்ரம் படத்தின் விளம்பர போஸ்டர்

ஈரோடு செல்லும் ரயில் எஞ்சினில் கமல்ஹாசனின் விக்ரம் படத்தின் விளம்பர போஸ்டர் ஒட்டப்பட்டு விளம்பரம் செய்யப்பட்டுள்ளது.

மாநகரம், கைதி, மாஸ்டர் ஆகிய படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள விக்ரம் படத்தில் கமல், விஜய் சேதுபதி, ஃபகத் பாசில்,உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ராஜ்கமல் நிறுவனம் மற்றும் டர்மரீக் மீடியா நிறுவனம் இணைந்து இப்படத்தை தயாரித்திருக்கின்றன.

இப்படத்தின் டீஸரும், க்ளிம்ப்ஸும் சில மாதங்களுக்கு முன்பு வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றன. லோகேஷ் கனகராஜ் கமல் ஹாசனின் ரசிகர் என்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் பன்மடங்கு அதிகரித்துள்ளது.


இதனைத்தொடர்ந்து, விக்ரம் திரைப்படம் உலகம் முழுவதும் ஜூன் 3ஆம் தேதி ரிலீஸ் செய்யப்படுவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. தமிழ்நாட்டு தியேட்டர்களில் வெளியிடும் உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றியிருக்கிறது.

இந்நிலையில் படத்தின் ப்ரோமோஷன் பணிகள் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. அந்தவகையில் ஈரோட்டில் ரயில் எஞ்சின் ஒன்றில் விக்ரம் படத்தின் போஸ்டர் ஒட்டப்பட்டு விளம்பரம் செய்யப்பட்டுள்ளது.

Tags

Next Story
வங்கி தேர்வில் முதலிடம் ராசிபுரம் மாணவனுக்கு வாழ்த்துகள் மலர்ந்த வரவேற்பு..!