கமலுக்கு பிடிக்கவில்லையா? இந்தியன் 2 - புதிய தகவல்கள்..!

கமலுக்கு பிடிக்கவில்லையா?  இந்தியன் 2 - புதிய தகவல்கள்..!
X

இந்தியன் 2  கமல் 

இந்தியன் 2 கமலுக்கே பிடிக்கலையா?.. என்ன ஆகுமோ? இது பற்றிய விவரங்களை காணலாம்.

இந்தியன் 2 படத்தை எப்படியாவது வெற்றிப் படமாக மாற்றி விட வேண்டும் என இயக்குநர் ஷங்கர் பல்வேறு நாடுகளுக்கு படக்குழுவினரை அழைத்துச் சென்று புரோமோட் செய்து வருகிறார். ஆனால் கமல்ஹாசனுக்கு என்ன பிரச்சனை என்று தெரியவில்லை. தொடர்ந்து இந்தியன் 2 படத்துக்கு எதிராகவே அவர் பேசி வருவது போல் தெரிகிறது என நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

ஷங்கர் இயக்கத்தில் 28 ஆண்டுகளுக்கு முன்னதாக கமல்ஹாசன் நடித்த இந்தியன் திரைப்படம் இன்றைக்கு பார்த்தாலும் ஒரு மாஸ்டர் பீஸ் ஆகவே இருக்கும். பாடல்கள் தொடங்கி படத்தின் கதை, நடிப்பு, மேக்கப் என அனைத்துமே மிரட்டி விடும்.

இந்தியன் 2 திரைப்படத்தை அதைவிட பிரமாண்டமாக ஷங்கர் உருவாக்கியுள்ள நிலையில் வரும் ஜூலை 12-ம் தேதி அந்த திரைப்படம் உலகம் முழுவதும் வெளியாக காத்திருக்கிறது. இந்நிலையில், கமல்ஹாசனின் சமீபத்திய பேச்சுகள் அவரது ரசிகர்கள் மத்தியிலே இந்தியன் 2 படத்துக்கான எதிர்பார்ப்பை குறைத்து வருவதாக நெட்டிசன்கள் குற்றச்சாட்டுகளை அடுக்கி உள்ளனர்.

பில்டப் முக்கியம்: பிரபாஸ் நடித்த கல்கி 2898 ஏடி படத்தில் கதையாகவும் கருவாகவும் எதுவுமே பெரிதாக இல்லாத நிலையிலும் மகாபாரதத்தை காப்பீட்டு ஸ்டார் வாஸ் உள்ளிட்ட படங்களை மேக்கிங்குக்காக பயன்படுத்திக் கொண்டு பிரபாஸை வைத்து எந்த அளவுக்கு பில்டப் கொடுக்க முடியுமோ அந்த அளவுக்கு பில்டப் கொடுத்து கல்கி படத்தை வெற்றிப் படமாக மாற்றி விட்டனர். அதே போல இந்தியன் 2 படத்துக்கான பில்டப் வேலைகளை கமல் செய்யாமல் அந்த படத்திற்கு எதிராகவே பேசி வருகிறாரா என்கிற கேள்விகள் எழுந்துள்ளன.

இந்தியன் 3 தான் பிடிக்கும்:

இந்தியன் 2 படத்தை விட தனக்கு இந்தியன் 3 திரைப்படம் தான் ரொம்பவே பிடிக்கும். அந்தப் படத்தின் கதை காரணமாகத்தான் இந்தியன் 2 படத்திலேயே நடிக்க தான் ஒப்புக்கொண்டதாகவும் கமல்ஹாசன் பேசியிருப்பது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. விரைவில் வெளியாக உள்ள இந்தியன் 2 படத்துக்கான பில்டப் வேலைகளை பண்ணாமல் அடுத்ததாக ரிலீசாகப் போகும் இந்தியன் 3 பற்றியே கமல் பேசி வரும் நிலையில், இந்தியன் 2 நல்லா இருக்காதோ என கமல் ரசிகர்களே ஹைப்பை குறைத்து வருவதாக கூறுகின்றனர்.

இந்தியன் 3 முடித்து விட்டு இந்தியன் 4, 5 எல்லாம் வருமா? என சமீபத்தில் பத்திரிக்கையாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கும் அய்யய்யோ இந்தியன் 2 படத்துக்கே 4 மணிக்கு அலாரம் எல்லாம் வைத்து மேக்கப் போட்டு நடித்து கஷ்டப்பட்டு விட்டேன். இதற்கு மேல் முடியாது. இந்தியன் 2 மற்றும் 3 முதலில் ரசிகர்களுக்கு பிடிக்கட்டும் என கமல் பதிலளித்திருந்தார்.

பல நூறு கோடி பட்ஜெட்டில் ஷங்கர் உருவாக்கியிருக்கும் இந்தியன் 2 திரைப்படம் தமிழ் சினிமாவுக்கு வெயிட்டான இண்டஸ்ட்ரி ஹிட் படமாக அமையுமா? அல்லது சொதப்பி விடுமோ என்கிற குழப்பத்திற்கு தற்போது ரசிகர்கள் ஆளாகி உள்ளனர். அனைத்து குழப்பங்களும் வரும் ஜூலை 12-ஆம் தேதி தெளிவாகிவிடும் என்றும் படத்தின் ரிலீஸை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!