முரட்டு சிங்கிளாக இருந்தால் தான் ஃப்ரீடமாக இருக்க முடியும்: திருமணம் பற்றி எஸ் ஜே சூர்யா

முரட்டு சிங்கிளாக இருந்தால் தான் ஃப்ரீடமாக இருக்க முடியும்: திருமணம் பற்றி எஸ் ஜே சூர்யா
X
ஒரு நடிகனாக இன்னும் வெற்றி பெறவில்லை, நான் எதிர்பார்க்கும் வெற்றி கிடைக்கும் வரை சிங்கிளாகத்தான் இருப்பேன் என கூறியுள்ளார்

ஆரம்ப காலத்தில் துணை இயக்குநராக இருந்த எஸ்.ஜே.சூர்யாவின் கடின உழைப்பை பார்த்த நடிகர் அஜித், தனது அடுத்த படத்தை இயக்கும் வாய்ப்பை இவருக்கு கொடுத்தார். அஜித் இரட்டை ரோலில் நடித்த வாலி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். இயக்குநராக முதல் படத்திலேயே வெற்றி பெற்றார் எஸ்.ஜே. சூர்யா.

இயக்குநராக மட்டும் இல்லாமல் ஆரம்ப காலத்தில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து, நியூ படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். வியாபாரி, நண்பன், ஸ்பைடர், மெர்சல், மான்ஸ்டர், போன்ற பல படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான மாநாடு, டான் திரைப்படங்கள் நல்ல வரவேற்பை பெற்றது.

இயக்குநர் நடிகர் என்று பன்முகத் திறமைகளை கொண்டுள்ள எஸ்.ஜே. சூர்யா இன்றும் திருமணம் செய்து கொள்ளாமல் சிங்கிளாகவே இருக்கிறார். திருமணம் பற்றி யோசிக்காமலேயே இருக்கும் எஸ் ஜே சூர்யாவிடம் திருமணம் எப்போது என்று கேட்டதற்கு, நான் இப்பொழுது சந்தோஷமாகத்தான் இருக்கிறேன். இன்னும் சாதிக்க பல விஷயங்கள் இருக்கின்றது. ஒரு இயக்குநராக வெற்றி பெற்று விட்டேன். ஆனால், ஒரு நடிகனாக இன்னும் வெற்றி பெறவில்லை, நான் எதிர்பார்க்கும் வெற்றி கிடைக்கும் வரை சிங்கிளாகத்தான் இருப்பேன்.


சிறுவயதில் தோன்றிய காதல் சில வருடங்கள் கழித்து மறைந்து விட்டது. முடிந்த விஷயத்தை நான் என்றும் யோசிப்பதில்லை. அடுத்தடுத்து படங்களில் நடிக்கும் யோசனை மட்டுமே என்னுள் உள்ளது. முரட்டு சிங்கிளாக இருந்தால் மட்டுமே ஃப்ரீடமாக இருக்க முடியும். இப்பொழுது நான் ஃப்ரீடமாக இருக்கிறேன் என்று கூறியுள்ளார்

இவர் நடிப்பில் தற்போது பொம்மை, மார்க் ஆண்டனி, உயர்ந்த மனிதன் போன்ற பல படங்கள் வெளிவர தயாராக உள்ளது

Tags

Next Story