'கார்கி' சக்ஸஸ் மீட்… நடிகை சாய் பல்லவி மகிழ்ச்சி ட்வீட்..!

கார்கி சக்ஸஸ் மீட்… நடிகை சாய் பல்லவி மகிழ்ச்சி ட்வீட்..!
X

நடிகை சாய் பல்லவி.

நடிகை சாய் பல்லவி 'கார்கி' சக்ஸஸ் மீட்டில் நடிகர் சூர்யா மகிழ்ந்து பாராட்டியுள்ளனர்.

நடிகை சாய் பல்லவி, தன்னுடைய கவர்ச்சியை மட்டுமே நம்பாமல், நடிப்பையும் நம்பியே திரைத்துறையில் தன்னுடைய பணியைத் தொடர்ந்து வருகிறார். இவரது பல படங்கள் இவரது சிறப்பான நடிப்பில் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. இதற்கான அண்மை உதாரணம்தான், 'கார்கி'.

தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் வெளியான இந்தப் படத்திற்கு ரசிகர்களிடையே சிறப்பான வரவேற்பு காணப்பட்டது. படத்திற்கு அதிகமான புரமோஷன்கள் எதுவும் செய்யப்படாத நிலையில், தமிழகத்தில் இந்தப் படத்தை சூர்யாவின் 2டி என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் வெளியிட்டது.

இதுவே படத்திற்கான சிறப்பான பிரமோஷனாக அமைந்தது. மேலும் திரையரங்குகளில் படத்தை பார்த்த ரசிகர்கள் மீண்டும் மீண்டும் படத்தை பார்க்க படையெடுத்ததும் சிறப்பாக அமைந்தது. அவர்களின் வார்த்தைகளும் விமர்சனங்களும் படத்திற்கான வரவேற்பை அதிகரித்தன. தொடர்ந்து படம் சிறப்பான அரங்கு கொள்ளாத காட்சிகளாக திரையரங்குகளில் ஓடி வருகின்றன.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!