உருவாகிறது சிலுக்கு வாழ்க்கை திரைப்படம் இரண்டாம் பாகம்

உருவாகிறது சிலுக்கு வாழ்க்கை திரைப்படம் இரண்டாம் பாகம்
X
மிகப்பெரிய வெற்றிப் படங்களில் ஒன்றான தி டர்ட்டி பிக்சரை மீண்டும் கொண்டுவர பாலிவுட் தயாரிப்பாளர் ஏக்தா கபூர் திட்டமிட்டுள்ளார்

1980 மற்றும் 90களில் தனது கண்களாலும் கவர்ச்சியாலும் ரசிகர்களைக் கிறங்கடித்தவர் நடிகை சில்க் ஸ்மிதா, அனைவரும் விரும்பும் நடிகையாக இருந்தார். அவரது வாழ்க்கை கதையை மையமாக வைத்து, இந்தியில், 'தி டர்டி பிக்சர்' என்ற படம் உருவானது.

இதில் வித்யாபாலன், சில்க் ஸ்மிதாவாக நடித்திருந்தார். சில்க் ஸ்மிதாவின் பயோபிக் படமான தி டர்ட்டி பிக்சர் திரைப்படம் கடந்த 2011 ஆம் ஆண்டு வெளியானது.

மிகப்பெரிய வெற்றிப் படங்களில் ஒன்றான தி டர்ட்டி பிக்சரை இரண்டாம் பாகமாக கொண்டுவர பாலிவுட் தயாரிப்பாளர் ஏக்தா கபூர் திட்டமிட்டுள்ளார்.. துணிச்சலான கமர்ஷியல் பாலிவுட் படங்களில் ஒன்றாக கருதப்படும் தி டர்ட்டி பிக்சர் இரண்டாம் பாகம் தயாராக உள்ளது.

இருப்பினும், இது சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டிருந்தாலும், தி டர்ட்டி பிக்சர் 2 முற்றிலும் மாறுபட்ட கதைக்களம் மற்றும் மாறுபட்ட நடிகர்களின் தொகுப்பைக் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

திரைக்கதை எழுத்தாளர் கனிகா தில்லான், இந்தப் படத்தின் திரைக்கதையை எழுத உள்ளார். மேலும் ஆண்டு இறுதிக்குள் அதை முடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன் பின்னர் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முந்தைய பாகத்தில் வித்யா பாலன் நடித்த நிலையில் இந்த பாகத்தில் கீர்த்தி சனோன் அல்லது டாப்ஸி நடிக்கலாம் என சொல்லப்படுகிறது. தமிழிலும் சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாறு படம் உருவாக உள்ளதாக சொல்லப்படுகிறது.

Tags

Next Story
challenges in ai agriculture