நடிகை கிரணிடம் வீடியோ காலில் பேச ஆசையா... இதோ இருக்கிறது "ஆப்"

நடிகை கிரணிடம் வீடியோ காலில் பேச ஆசையா... இதோ இருக்கிறது ஆப்
X

 நடிகை கிரண்.

நடிகை கிரணிடம் வீடியோ காலில் பேச "ஆப்"(app) ஒன்றை அவர் தொடங்கி உள்ளார்.

சினிமாவில் நடிக்க வாய்ப்பு தேடுவதற்காக நடிகைகள் இப்போது பல்வேறு வித்தைகளை காட்ட வேண்டிய நிலைமை உள்ளது. இவர்கள் அடிக்கடி கவர்ச்சியாக போட்டோ ஷூட்களை எடுத்து வெளியிடுகிறார்கள். இதற்கு அவர்களுக்கு சமூக வலைத்தளங்கள் ஒரு வரப்பிரசாதமாக உள்ளன.கவர்ச்சி படங்களை சினிமா பட தயாரிப்பு கம்பெனிகளுக்கும், நடிகர்களுக்கும், இயக்குனர்களுக்கும் அனுப்பி நடிக்க வாய்ப்பு கேட்கிறார்கள். இதற்காக நடிகைகள் தனியாக ஏஜெண்டுகளை வைத்து இருக்கிறார்கள். ஒரு படத்தில் நடிக்க வாய்ப்பு வாங்கி கொடுத்தால் ஏஜெண்டுகள் தனியாக கமிஷன் எடுத்துக்கொள்வார்கள். அதோடு ஜவுளிக்கடை , நகைக்கடை திறப்பு என்று திறப்பு விழாக்களில் கலந்து கொள்ளவும் நடிகைகள் பணம் வசூல் செய்கிறார்கள். இதற்காக நடிகைகள் சமூக வலைத்தளங்களில் மிகவும் சுறுசுறுப்பாக இருப்பார்கள். சமீபத்தில் அறிமுகம் ஆன இளம நடிகைகள் தான் இவ்வாறு சமூக வலைத்தளங்களில் கவர்ச்சி படங்களை வெளியிட்டு வாய்ப்பு தேடுகிறார்கள் என்றால் அவர்களோடு போட்டி போட்டுக்கொண்டு 40வயதை கடந்த ஆன்டி நடிகைகளும் போட்டோ ஷூட் நடத்தி படங்களை வெளியிட்டு நடிக்க வாய்ப்பு கேட்கிறார்கள்.

இப்போது இளம் நடிகைகளுக்கு போட்டியாக சமூக வலைத்தளங்களில் கவர்ச்சி படங்களை வெளியிடுகிற ஆன்டி நடிகைகளில் நடிகை கிரண் தான் முதல் இடத்தில் உள்ளார். அவர் 41வயதை கடந்து விட்டார். திருமணம் ஆகிவிட்டது. கணவருடன் மும்பையில் வசிக்கிறார். 2002-ம் ஆண்டு 'ஜெமினி' படத்தில் நடிகர் விக்ரமுக்கு ஜோடியாக தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனவர். இந்த படத்தில் அவர் துறுதுறு என்று நடித்து இருப்பார். கிரணின் கவர்ச்சி இந்த படத்தில் பெரிய வரவேற்பை பெற்றது. அதனைத்தொடர்ந்து 'வில்லன்', 'அன்பே சிவம்', 'வின்னர்' என்று பல படங்களில் நடித்து தமிழில் முன்னணி நடிகையானார். அதோடு மலையாளம், தெலுங்கு, கன்னடம் என்று பல மொழிப்படங்களில் நடித்தார்.

இப்போது பட வாய்ப்புகள் எதுவும் இல்லாமல் சமூக வலைத்தளங்களில் மட்டும் தனது கவர்ச்சி படங்களை வெளியிட்டு பிசியாக உள்ளார். தனது 'இன்ஸ்டாகிராம்' பக்கத்திலும் விதவிதமான படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்துள்ளார். வலைத்தளத்தில் ரசிகர்கள் பட்டாளம் அதிகரித்ததால் அதை பயன்படுத்தி பணம் சம்பாதிக்க புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளார். தனது கவர்ச்சி படங்களை ரசிகர்கள் ரசிக்க இணைய தளத்தில் தனி செயலி(app) ஒன்றை தொடங்கி இருக்கிறார். அந்த செயலியில் தனது படங்களை பார்த்து ரசிக்க தனியாக கட்டணம் நிர்ணயம் செய்துள்ளார். கிரணின் இந்த செயலியை டவுன்லோட் செய்ய 49 ரூபாய் கட்டணம் கட்ட வேண்டும். மேலும் ஆயிரம் ரூபாய் கட்டணம் செலுத்தினால் கிரணின் கவர்ச்சி படங்கள் கிடைக்கும். இந்த செயலி மூலம் ஒருவர் நடிகை கிரணுடன் ஐந்து நிமிடம் பேசுவதற்கு 10000 ரூபாய் கட்டணம். சிலர் கிரணிடம் வீடியோ காலில் பேச ஆசைப்படுவார்கள் அதற்கும் செயலியில் வசதி உள்ளது. வீடியோ காலில் 15 நிமிடங்கள் கிரணிடம் பேசுவதற்கு 14,000 ரூபாய் செலுத்த வேண்டும். அதுவே கூடுதலாக 25 நிமிடங்கள் அவருடன் பேச 25 ஆயிரம் செலுத்த வேண்டும். எல்லாம் ஆன்லைன் பரிவர்த்தனைகள் தான். இவ்வாறு ரசிகர்களிடம் கிரண் பணம் வசூல் செய்வது சினிமா உலகத்தில் வியப்பாக பார்க்கப்படுகிறது. சில வயதான நடிகைகள் நாம் இதை செய்ய தவறி விட்டோமே என்று இப்போது வருத்தப்படுகிறார்கள்.

Tags

Next Story