தீபாவளி ரிலீஸ் படம் என்னென்னங்க..? எது பட்டாசா வெடிக்கப்போகுது..?

Diwali Release Tamil Movies
Diwali Release Tamil Movies-நம்ம நாட்டில் பண்டிகைகளுக்கு குறைச்சலே இல்லீங்க. அதேபோல பண்டிகைன்னா சினிமா இல்லாமல் ஒரு கொண்டாட்டமா..? அதே போல தீபாவளின்னா இனிப்புகள் மட்டுமல்ல புது சினிமாவும் கொண்டாட்டத்தில் சேரும். குறிப்பாக விஜய், அஜித், ரஜினி உள்ளிட்ட முன்னணி ஹீரோக்களின் படங்கள் பொங்கல், தீபாவளி போன்ற பண்டிகைகளில் கண்டிப்பாக வெளியாகிவிடும். அதே போல, இந்த வருடம் தீபாவளிக்கு சில முக்கிய ஹீரோக்களின் படங்கள் ரிலீஸாக உள்ளன.

கார்த்தியின் 'சர்தார்'
கோலிவுட் சினிமாவில் இரும்புத்திரை, ஹீரோ போன்ற படங்களை இயக்கி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் இயக்குனர் மித்ரன். இவர், தற்போது கார்த்தியை வைத்து சர்தார் படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் கார்த்திக்கு ஜோடியாக ராஷிகண்ணா நடிக்கிறார்.
படம், தீபாவளியான அக்டோபர் 21ம் தேதி வெளியாகிறது. 90களில் முன்னனி நடிகையாக இருந்த லைலா, இப்படத்தின் மூலம் மறுபடியும் வந்துட்டேன்னு சொல்லு என்று மிரட்டலாக ரீ என்ட்ரி கொடுத்துள்ளார். இதனால், இப்படத்தின் எதிர்பார்ப்பு எகிறிகிடக்கிறது. இப்படத்திற்காக நடிகர் கார்த்தி பல்வேறு கெட்-அப்களில் வருகிறார் என்பதை வெளியாகியுள்ள புகைப்படங்கள் உறுதிப்படுத்துகின்றன. மேலும் இந்த படத்தில் கார்த்தி அப்பா-மகன் என இரண்டு வேடங்களில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

சிவகார்த்திகேயனின் 'ப்ரின்ஸ்'
சத்யராஜ், சிவகார்த்திகேயன் கூட்டணியில் வெளிநாட்டு நடிகை மரியா ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'ப்ரின்ஸ்'. தெலுங்கு இயக்குனர் அனுதீப் இப்படத்தை இயக்கியுள்ளார். சமீபத்தில் வெளியான படத்தின் ட்ரைலர் பெரும்பாலான ரசிகர்களை கவர்ந்துள்ளது தெரிகிறது. நடிகர் சிவகார்த்திகேயனின் வழக்கமான கான்செப்டான காமெடி-காதலே இப்படத்திலும் இடம்பெறுகிறது. கூடுதலாக வெளிநாட்டு பெண்ணை விரும்பும் புதிய காதல் மற்றும் செண்டிமெண்ட் காட்சிகள் இடம்பெற்றுள்ளதாக தெரிகிறது. கார்த்தியின் சர்தார் படத்துடன் மோத தயராகிவிட்டது, ப்ரின்ஸ்.
சிவகார்த்திகேயனின் படம் தீபாவளியன்று வெளியாவது இதுவே முதல் முறை. தமிழ்-தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் இந்தப் படம் உருவாக்கப்பட்டுள்ளது. ப்ரின்ஸ் படத்தின் ரிலீஸிற்காக ரசிகர்கள் ஆர்வமுடன் காத்துக்கொண்டுள்ளனர்.

அக்ஷய் குமாரின் 'ராம் சேது'
பாலிவுட் சினிமாவில் தி ஸோயா ஃபேக்டர், தேரா பின் லேடன் உள்ளிட் படங்களை இயக்கிப் புகழ்பெற்றவர் அபிஷேக் ஷர்மா. இவர், தற்போது, பிரபல நடிகர் அக்ஷய் குமாரை வைத்து 'ராம் சேது' படத்தை டைரக்டு செய்துள்ளார். சமீபத்தில் வெளியான படத்தின் ட்ரைலர், பல மில்லியன் வியூஸ்களை கடந்து ரசிகர்களின் கவனத்தை பெற்றமை குறிப்பிடத்தக்கது.
உண்மையிலேயே ராமர் பாலம் இருக்கிறதா இல்லையா? என்ற மர்ம முடிச்சை கண்டறிய புறப்படும் ஹீரோ மற்றும் அவனது குழுவினரின் கதையாக, வீரதீர சாகச பாணியில் இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. படம், அக்டோபர் 25ம் தேதி வெளியாகிறது. இதில், அக்ஷய் குமாருடன் ஜாக்குலின் ஃபெர்னான்டஸ், நாசர் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

மோகன் லாலின் மான்ஸ்டர்:
'லாலேட்டன்' என அழைக்கப்படும் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன் லாலின் நடிப்பில் விரைவில் வெளியாகவுள்ள படம் மான்ஸ்டர். த்ரில்லர் கதையாக எடுக்கப்பட்டுள்ள இப்படத்தை இயக்குனர் வைசாக் இயக்கியுள்ளார். மோகன் லால் ஹீரோவாக நடிக்க, லட்சுமி மஞ்சு, பிஜ்ஜு பாப்பன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கான ப்ரமோஷன் பணிகள் கடந்த ஆண்டே தொடங்கி விட்டது. ஆனால் கொரோனா பரவல் காரணமாக படப்பிடிப்புகளில் சிறிது கால தாமதம் ஏற்பட்டது. ஒரு வழியாக படம் முடிவடைந்து இந்த மாதம் 21ம் தேதியன்று ரிலீசாக உள்ளது.
அஜய் தேவ்கன் -ன் 'தேங் காட்'
டி சீரிஸ் நிறுவனம் தயாரித்துள்ள படமான 'தேங் காட்' ஃபேன்டசி, காமெடி கதையாக உருவாக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் அஜய் தேவ்கன், சித்தார்த் மல்ஹோத்ரா, ரகுல் ப்ரீத் சிங் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். அக்டோபர் 25ம் தேதி ரிலீசாகிறது. இந்த படத்துக்கும் ரசிகர்கள் வரவேற்பு உள்ளது. அதனால் ரசிகர்கள் ஆர்வமுடன் காத்துள்ளனர்.
படவெட்டு
தீபாவளியன்று வெளியாகும் இன்னொரு மலையாளப்படம் 'படவெட்டு'. 'அருவி' படப் புகழ் அதிதி பாலன், மஞ்சு வாரியர் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்க, நிவின் பாலி கதையின் நாயகனாக நடித்துள்ளார். ஆக்ஷன், த்ரில்லர் கதையாக உருவாக்கப்பட்டுள்ள இப்படத்தை புது முக இயக்குனர் லிஜூ கிருஷ்ணா இயக்கியுள்ளார். இந்த படம் தீபாவளிக்கு முன்னதாக அதாவது அக்டோபர் 21ம் தேதி வெளியாகிறது.

ஒரி தேவுடா
தமிழில் அசோக் செல்வன் நடித்து வெளிவந்த படம் 'ஓ மை கடவுளே'. இந்தப் படத்தின் தெலுங்கீழ் உருவாக்கப்பட்டுள்ளது. 'ஒரி தேவுடா' படம் காதல்-காமெடி கதையாக எடுக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் லிட்டில் திங்ஸ் வெப் சீரிஸ் மூலம் பிரபலமான நடிகை மிதிலா பால்கர் நடித்துள்ளார். படம் வருகின்ற 21ம் தேதி வெளியாகிறது.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu