சறுக்கலை சந்தித்து வரும் நடிகை கீர்த்திசுரேஷ்

சறுக்கலை சந்தித்து வரும் நடிகை கீர்த்திசுரேஷ்
X

நடிகை கீர்த்தி சுரேஷ்.

தமிழ் சினிமாவில் குறுகிய காலத்தில் பிரபலமானவர் கீர்த்தி சுரேஷ். ஆனால் சமீபகாலமாக அவரது படங்கள் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை தந்து வருகின்றன.

உதயநிதி, ஜெயம் ரவி, சிவகார்த்திகேயன், தனுஷ், விக்ரம், விஜய், சூர்யா, விஷால், ரஜினிகாந்த் ஆகியோரது படங்களில் நடித்து விட்டார். வெற்றி, தோல்வி என மாறி மாறிப் பார்த்த கீர்த்திக்கு கடந்த சில வருடங்களாக தமிழில் வெற்றிப் படங்கள் என சரியாக அமையவில்லை.

'சர்கார்' படத்திற்குப் பிறகு அவர் நடித்து தியேட்டர்களில் வெளியான 'அண்ணாத்த' பெரும் தோல்விப் படமாகவும், 'மாமன்னன்' ஓரளவு வெற்றிப் படமாகவும், இந்த ஆண்டில் வெளிவந்த 'சைரன்' மற்றுமொரு தோல்விப் படமாகவும் அமைந்தது. ஓடிடி தளங்களில் அவர் முதன்மைக் கதாபாத்திரங்களில் நடித்த 'பெண்குயின், சாணி காயிதம்' ஆகிய படங்கள் வெளிவந்தன. அவற்றில் 'சாணி காயிதம்' படத்தில் அவரது நடிப்பு பேசப்பட்டது.

கீர்த்தி தமிழில் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்து முதன் முதலாக தியேட்டர்களில் வெளியான படம் கடந்த வாரம் வெளியான 'ரகு தாத்தா'. அப்படத்தைத் தயாரித்த நிறுவனம் 'கேஜிஎப்' பட நிறுவனம் என்பதால் படம் மீது ஒரு எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், 'தங்கலான், டிமாண்டி காலனி 2' ஆகிய படங்களுக்கு மத்தியில் அந்தப் படம் வந்த இடம் தெரியாமல் போய் விட்டது.

தனி கதாநாயகியாக தனித்துவமான வெற்றியை அவரால் பெற முடியவில்லை. கீர்த்தி நடித்து அடுத்து வர உள்ள 'ரிவால்வர் ரீட்டா, கன்னி வெடி' ஆகியவை அந்த வெற்றியைத் தருமா என்று திரையுலகில் கேட்க ஆரம்பித்து விட்டார்கள்.

Next Story
அடுத்த தலைமுறைக்கு  மருத்துவத்தை கொண்டு செல்லும் Google AI for Healthcare