பிரபலமான நட்சத்திரங்கள் பட்டியல்: முதலிடத்தில் தனுஷ்

பிரபலமான நட்சத்திரங்கள் பட்டியல்: முதலிடத்தில் தனுஷ்
X

நடிகர் தனுஷ் 

மிகவும் பிரபலமான நட்சத்திரங்கள் பட்டியலில் தனுஷ் முதலிடத்தில் உள்ளார்; 10ல் 6 நட்சத்திரங்கள் தெற்கை சேர்ந்தவர்கள்

ஐஎம்டிபி எனும் நிறுவனம் சர்வதேச அளவில் திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், ஓடிடி படைப்புகள் உள்ளிட்டவற்றின் தகவல்களை சேகரித்து வழக்கும் ஆன்லைன் தரவு தளமாக செயல்படுகிறது

இதன் சார்பில், மிகவும் பிரபலமான நட்சத்திரங்களை பட்டியல் ஆண்டு இறுதியில் வெளியாவது வழக்கம். அந்த வகையில் 2022ஆம் ஆண்டின் டாப் 10் இந்திய நட்சத்திரங்களின் பட்டியல் வெளியாகி இருக்கிறது.

இந்த பட்டியலில் இந்திய அளவில் முதலிடம் பிடித்துள்ளார் நடிகர் தனுஷ். தனுஷை தொடர்ந்து 2-ம் இடத்தில் பாலிவுட் நடிகை ஆலியா பட் வருகிறார். இந்த வருடத்தின் பிரம்மாஸ்திரா-1, ஆர்ஆர்ஆர், கங்குபாய் உள்ளிட்ட படங்களின் பிரபலம் அலியாபட்டுக்கு கைகொடுத்திருக்கிறது.

ஐஎம்டிபி புதன்கிழமை பகிர்ந்து கொண்ட பட்டியலில் பாலிவுட் நடிகர்கள் ஆலியா பட் மற்றும் ஐஸ்வர்யா ராய் பச்சன் இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தைப் பிடித்தனர். ராம் சரண், சமந்தா ரூத் பிரபு , என்டிஆர் ஜூனியர், அல்லு அர்ஜுன் மற்றும் யாஷ் உட்பட முதல் பத்து நட்சத்திரங்களில் ஆறு பேர் தென்னிந்தியாவைச் சேர்ந்தவர்கள்.

மூன்றாம் இடத்தில் பொன்னியின் செல்வன் -1 படத்தில் நடித்திருக்கும் ஐஸ்வர்யா ராய் இடம்பிடித்திருக்கிறார். டோலிவுட்டின் ராம்சரண் தேஜா 4-ம் இடத்தையும் வகிக்கிறார். 5-ம் இடத்தில் யசோதா திரைப்படத்தில் நடித்திருக்கும் சமந்தா பிடித்திருக்கிறார்.

அதற்கடுத்த இடங்களை பாலிவுட் நட்சத்திரங்களான ஹிர்த்திக் ரோஷன், கியரா அத்வானி, டோலிவுட் நட்சத்திரங்களான ஜூனியர் என்டிஆர் மற்றும் அல்லு அர்ஜூன் ஆகியோர் பிடித்துள்ளனர். பத்தாவது இடத்தில் கேஜிஎஃப்-2 படத்தில் நடித்த நடிகர் யாஷ் வருகிறார்.

தமிழகத்தின் மற்ற உச்ச நட்சத்திர நடிகர்களை விட தனுஷ் சர்வதேச அளவில் கவனம் பெற்றிருப்பது முக்கியத்துவம் வாய்ந்தாக பார்க்கப்படுகிறது. நடிகர் தனுஷ் ஹாலிவுட்டின் 'தி க்ரே மேன்' முதல் கோலிவுட்டின் 'திருச்சிற்றம்பலம்' வரை அவரது வெற்றிப்படங்கள் இந்த சாதனைக்கு களம் அமைத்து கொடுத்தாக கூறப்படுகிறது.

அலியா பட் ஒரு அறிக்கையில், "2022 இதுவரை நான் திரைப்படங்களில் மிகவும் மறக்கமுடியாத ஆண்டாக இருந்தது - இந்த ஆண்டு எனது எல்லா படங்களுக்கும் பார்வையாளர்கள் கொடுத்த அன்பிற்கு நான் எப்போதும் நன்றி மற்றும் நன்றியுள்ளவளாக இருக்கிறேன், மேலும் நம் நாட்டின் சிறந்த திரைப்பட தயாரிப்பாளர்கள் மற்றும் கலைஞர்க ஆகியோர் ஒத்துழைத்ததை பெருமையாக உணர்கிறேன் என்று கூறினார்

சுமார் 20 கோடி பார்வையாளர்களை கொண்டிருக்கும் ஐஎம்டிபி தளம், வாராந்திர தரவரிசை பட்டியலில் முன்னிலை வகிப்போரை தொகுத்து பரிசீலித்ததன் வாயிலாக இந்த 2022-ஆம் ஆண்டின் டாப் 10 பட்டியலை உருவாக்கி உள்ளது.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!