என்ன ஆனார், தமிழ் காமெடி நடிகர் சந்தானம்? ஹீரோ ஆசையால் காணாமல் போன காமெடி
நடிகர் சந்தானம்
பொதுவாகவே தமிழில் மட்டுமல்ல இந்திய சினிமாவில் காமெடியன்களாக சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி பிரபலமானவுடன் ஹீரோ ஆகிவிடுகின்றனர். அது அவர்களின் லட்சியமாக கூட இருக்கலாம். ஆனால், அவர்கள் ரசிகர்களை நினைத்துப்பார்க்க வேண்டும். காமெடியன்கள் ஹீரோ ஆவது உண்மையிலேயே மிகப்பெரிய தவறு என்றுதான் சொல்லவேண்டும்.
காமெடியனாக கலக்கிய வடிவேல் நிலை என்ன ஆயிற்று? இன்று டிவியை ஆன் பண்ணினால் அவர் இல்லாத காமெடி காட்சிகள் கிடையாது. அவர் இல்லாத மீம்ஸ்கள் கிடையாது. அப்படி ஒரு காமெடி சாம்ராஜ்ஜியத்தின் சக்கரவர்த்தியாக இருந்தவர், ஹீரோவாகி இன்று காணாமலேயே போய்விட்டார். அதேபோல விவேக்,பிரம்மானந்தம் போன்றவர்களும் ஹீரோவாக சாதிக்கவில்லை.
எந்த ஒரு காமெடியனும் ஹீரோவாக வெற்றிபெற்று அசைக்கமுடியாத ஹீரோவானதை பார்க்க முடிகிறதா? நம்மிடம் அதற்கான பதிலும் இல்லை. தெலுங்கு நகைச்சுவை நடிகரான சுனில் சிறந்த நகைச்சுவை நடிகராக இருந்ததால் அவருக்கு ஹீரோ வாய்ப்புகள் கிடைத்தன. ஹீரோ மகிழ்ச்சியில் போனார். ஆனால், வெற்றிபெற முடியவில்லை.
சந்தானம் :
சந்தானம் ஒரு சிறந்த நகைச்சுவை நடிகர். ஆனால், ஹீரோவாகி அவருக்கான இடத்தை இழந்துவிட்டார். வடிவேல், விவேக் போன்றவர்களுக்கு அடுத்த நிலையில் வளர்ந்தவர் சந்தானம். ஆனால் ஹீரோ ஆசை அவரையும் விட்டு வைக்கவில்லை. அவர் நடித்த பிஸ்கோத்து,தில்லுக்கு துட்டு,சக்கை போடு போடு ராஜா,பாரிஸ் ஜெயராஜ்,சபாபதி,டிக்கிலோனா போன்ற படங்களில் தில்லுக்கு துட்டு, A 1, டிக்கிலோனா, கண்ணா லட்டு திங்க ஆசையா போன்ற படங்கள் மட்டுமே ஓரளவுக்கு அவருக்கு வெற்றியை தந்தது.
ஹீரோ கனவில் இரண்டொரு படங்களில் தலைகாட்டி காணாமல் போவதைவிட காமெடியனாக இருந்து தொடர் வெற்றியைத் தருவதே ஒரு காமெடியனுக்கு பெரும் வெற்றியாக அமையும். காமெடியன்கள் ரசிகர்களை முதலில் நினைக்கவேண்டும். அவர்களின் காமெடிதான் அவர்களை வெற்றி பெற வைத்தது என்பதை மறந்துவிடக்கூடாது. சிறந்த காமெடியனாக இருந்த சந்தானம் இப்போது எப்படி இருக்கிறார் என்று உங்களுக்கே தெரியும். ஏன் சந்தானம் இப்படி ?
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu