சில்லா.. சில்லா... பட்டயக் கிளப்பும் வரிகளுடன் வெளியாகியது அஜித்தின் துணிவு பட பாடல்..

சில்லா.. சில்லா... பட்டயக் கிளப்பும் வரிகளுடன் வெளியாகியது அஜித்தின் துணிவு பட பாடல்..
X

துணிவு பட போஸ்டர்.

நடிகர் அஜித் நடித்து பொங்கலுக்கு வெளியாக உள்ள துணிவு படத்தில் இடம்பெற்றுள்ள சில்லா.. சில்லா... பாடல் பட்டயக் கிளப்பும் வரிகளுடன் வெளியாகியது.

2023 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இரண்டு முக்கிய திரைப்படங்கள் வெளியாகும் என்ற அறிவிப்பு வெளியான நாளில் இருந்தே திரைப்பட ரசிகர்கள் மத்தியில் பரபரப்புக்கு பஞ்சமில்லை. ஆம்! தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களான விஜய் நடித்த வாரிசு மற்றும் அஜித் நடித்த துணிவு ஆகிய படங்கள் பொங்கல் பண்டிகைக்கு வெளியாகின்றன.

அஜித் மற்றும் விஜய் நடித்த படங்கள் சாதாரண நாட்களில் வெளியானலே அதை திருவிழா போல அவர்களது ரசிகர்கள் கொண்டாடுவது வழக்கம். தற்போது, பொங்கல் பண்டிகைக்கு இரண்டு படங்களுமே ஜனவரி 12 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளால் எதிர்ப்பார்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

அஜித் நடித்த துணிவு படத்தின் இயக்குநர் வினோத் தரமான படங்களை கொடுத்தவர் என்பதால் பெரும் எதிர்பார்ப்பு கிளம்பி உள்ளது. தமிழகம் முழவதும் 600-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் துணிவு படம் வெளியாக வாய்ப்பு உள்ளது.

இதேபோல, விஜய் நடித்த வாரிசு படத்திற்கும் எதிர்பார்ப்பு எகிறி உள்ளது என்றே கூறலாம். அந்தப் படத்தில் இடம்பெற்ற ரஞ்சிதமே.. ரஞ்சிதமே.. பாடலும், சிம்பு பாடிய தீ.. தளபதி.. என்ற பாடலும் சமீபத்தில் வெளியாகி இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

இதேபோல, நடிகர் அஜித்குமார் நடிப்பில் உருவாகியுள்ள துணிவு படத்திற்கும், அதன் பாடல்களுக்கும் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. நேர்கொண்ட பார்வை, வலிமை ஆகிய படங்களைத் தொடர்ந்து அஜித்-வினோத் கூட்டணி துணிவு படத்தில் இணைந்துள்ளது.

இதற்கிடையே, துணிவு படத்தின் இசையமைப்பாளர் ஜிப்ரன் கடந்த மாதம் தனது டுவிட்டர் பக்கத்தில், துணிவு படத்தில் இடம்பெற்றுள்ள சில்லா.. சில்லா... என்ற பாடல் வரிகளை வெளியிட்டு மகிழ்ந்து இருந்தார். அந்த பாடலை அனிருத் பாடியிருப்பது இன்னும் எதிர்பார்ப்பை எகிறச் செய்துள்ளது. வைசாக் என்பவர் இந்த பாடலை எழுதி உள்ளார்.

இந்தநிலையில், துணிவு படத்தில் இடம்பெற்றுள்ள சில்லா.. சில்லா.. பாடல் இன்று வெளியாகியது. சில்லா. சில்லா.. பாடல் வெளியான சில நிமிடங்களிலேயே பார்வையாளர்களின் எண்ணிக்கை பல லட்சங்களை கடந்துள்ளது. மேலும், பாடல் தனிரகம் என அஜித் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

அனிருத் குரலில்,

இருப்பது ஒரு லைப்..

அடிச்சிக்க சியர்ஸ்..

போனதெல்லாம் போகட்டும்.

தேவை இல்லை தியர்ஸ் (கண்ணீர்).என்ற வரிகள் பாடலில் இடம்பெற்றுள்ளன.

மேலும்,

புடிச்சத செய்யுறது என்னைக்குமே மாஸ்..

தினம் தினம் முக்கியம்பா நம்ம இன்னர் பீஸ்.. என்ற வரிகளையும்,

என்னைக்குமே படைச்சவன் துணை நமக்கு..

மனசுல போராட துணிவு இருக்கு..

சுத்தி பாரு சந்தோசம் தான் கொட்டிக் கிடக்கு..

வந்திருச்சி நம்ம காலம் ஏறி கலக்கு..

என்ற வரிகளையும் அஜித் ரசிகர்கள் தங்களது செல்போன்களில் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் வைத்து கலக்கி வருகின்றனர்.

பின்னால பேசுறவன் எல்லாம் கிழிஞ்ச டயரு.. என்றும்

வாய் உதாரு வேணா..

மாட்டிக்காத வீனா..

நம்மளோட வேலைய பார்த்து ஊர் பேசும் தானா.. என்ற வரிகளும்

இஷ்டப்பட்டு கஷ்டப்பட்டா எல்லாம் வருமா தானா..

மகத்துறவன் கத்தட்டுமே தட்டி விடு.. என்ற வரிகளும் பாடலில் இடம்பெற்றுள்ளன.

மேலும்,

மத்தவன மட்டம் தட்டி மேல வந்து நோ யூஸ்.

கத்துறவன் கத்தட்டுமே தட்டிவிடு டைம் பாஸ்..

என பாடல் வரிகள் பட்டயக் கிளப்பும் வகையில் இருப்பதாகவும், ஜிப்ரான் இசையில் அனிருத் குரலில் இடம்பெற்றுள்ள சில்லா.. சில்லா.. பாடல் தீயாக இருப்பதாகவும் அஜித் ரசிகர்கள் தங்களது சமூக வலைதளத்தில் கருத்து தெரிவித்து உள்ளனர்.

Tags

Next Story
Weight Loss Tips In Tamil