சர்ச்சை பிரபலங்களுக்கு 'பிக் பாஸ்' வாய்ப்பு குடுக்குதாம்..!? கொஞ்சம் வெய்ட் பண்ணுங்க..!
bigg boss season 6-பிக் பாஸ் கமல்.
bigg boss season 6-பொதுவாகவே சர்ச்சைக்கும் சினிமாவுக்கும் எப்போதுமே மவுசு அதிகம். சர்ச்சையானவர்களை சிலர் வறுத்து எடுப்பதும் சிலர் போற்றி புகழ்வதும் தொடராகவே இருக்கிறது.
அந்த வகையில் பிக் பாஸ் நிகழ்ச்சியும் போய்விட்டது. நன்றாக கவினித்தால் அது புரியும். சர்ச்சைக்குரியவர்கள் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருக்கும்போது செம்ம ஹிட். ஆனால் 5 சீசன்களில் 5வது சொதப்பல் என்று ரசிகர்கள் குமுறுகிறார்கள். மற்ற 4 சீசன்களை போல இதில் சிறைப்பட்டு இல்லை. ஏனெனில் அதில் பங்கெடுத்தவர்கள் யாரும் சொல்லிக்கொள்வதுபோல இல்லை என்றும் கூறுகிறார்கள்.
பிக் பாஸ் ஹிந்தியில் வந்தபின்னர் தமிழ்த் தொலைக்காட்சி உலகத்துக்குப் புதிதாக அறிமுகமாகி நிகழ்ச்சிக்கு நல்ல வரவேற்பும் கிடைத்தது.சென்ற ஆண்டு 5வது சீஸனும் முடிந்துவிட்டது.
தற்போது 6-வது சீசனுக்கான வேலைகள் நடந்துவருவது நமக்கு தெரியும். முதல் ஐந்து சீசன்களையும் கமல் தொகுத்து வழங்கினார். ஒ.டி.டி.யில் தொடங்கப்பட்ட `பிக் பாஸ் அல்டிமேட்' -ஐ சிம்பு தொகுத்து வழங்கினார்.
இப்போது பிக் பாஸ் 6 வது சீசனை தொகுத்து வழங்கப் போவது யார்? என்கிற ஒரு கேள்வி தொடக்கத்தில் இருந்து வந்தது. ஆனால், சில மாதங்களுக்கு முன் பிக் பாஸ் சேனல் கமலிடம் பேச்சுவார்த்தை நடத்தி 6வது சீசனைத் தொகுத்து வழங்க அவரை உறுதிப்படுத்திவிட்டது.
bigg boss season 6-இந்த நேரத்தில் பிக் பாஸ் சீசன் 6 அநேகமாக வரும் அக்டோபர் மாதம் 2ம் தேதி தொடங்கலாம் என தெரிகிறது. போட்டியாளர்களைத் தேர்வு செய்வது ஏற்கனவே தொடங்கி நடந்தும் வருகிறது. இன்னும் சில தினங்களில் அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகும் என்று தெரிகிறது.
5வது சீசன் சுவாரஸ்யம் இல்லாமல் போனதற்கு பங்கேற்பாளர்களின் தேர்வுதான் என்று நிர்வாகத்தரப்பிலும் எண்ணுவதாக தெரிகிறது. அதனால் இந்த சீசனில் போட்டியாளர்களை தேர்வு செய்வதில் கூடுதல் கவனம் செலுத்த முடிவுசெய்யப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
அதனால் பிரபலமான சர்ச்சைக்குப் பெயர் போனவர்களை கூடுதலாக பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு தேர்வு செய்யப்படலாம் என்று கூறுகிறார்கள். தேர்வு செய்யப்பட சிலரின் பெயர்கள் ஊகங்களாக சமூக வலைத்தளங்களில் வெளியாகின
bigg boss season 6-தற்போது அந்தப் பட்டியலில் சிம்பு குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளியிட்டு பரபரப்பைக் கிளப்பிய நடிகை ஶ்ரீநிதி பெயரும் அடிபடத் தொடங்கி இருக்கிறது என்கின்றனர். ஆகவே, இன்னும் அடுத்தடுத்து திடுக் தகவல்கள் வெளியாகலாம் என்கிறார்கள்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu