bigg boss 6 dhanalakshmi-ஏடிகே-வை கடுப்பேத்திய தனலட்சுமி..! செவுள்ல அடி வாங்கினா திருந்தும்..!

bigg boss 6 dhanalakshmi-பிக் பாஸ் சீசன் 6 (கோப்பு படம்)
Bigg Boss 6 Dhanalakshmi-விஜய் டிவியில் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி தொடங்கி நான்காவது வாரமாக பரபரப்பாக போய்க்கொண்டு இருக்கிறது. தற்போது நான்காவது வாரம் தொடங்கி இருக்கிறது.
இந்த நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் ஜிபி முத்து, அசீம், அசல், ராபர்ட், ராமசாமி, ஏடிகே, ஜனனி, அமுதவாணன், விஜே மஹேஸ்வரி, விஜே கதிரவன், ஆயிஷா, தனலட்சுமி, ரச்சிதா, மணிகண்டன், மெட்டி ஒலி சாந்தி, விக்ரமன், குயின்ஸி மற்றும் நிவாஷினி, ஷிவின் கணேசன் என 20 பேர் கலந்து பங்கேற்பாளர்களாக கலந்துகொண்டனர்.
முதல் வாரத்திலேயே வைல்ட் கார்ட் என்ட்ரியாக மைனா நந்தினி வந்து இருக்கிறார். மேலும், இந்த நிகழ்ச்சியில் அதிக ரசிகர் பட்டாளம் கொண்ட ஜிபி முத்து மகளை பார்க்க வேண்டும் என்ற ஏக்கம் காரணமாக வீட்டிலிருந்து வெளியேறினார்.
bigg boss 6 dhanalakshmi
பொம்மை டாஸ்க்
கடந்த வாரம் நடந்த பொம்மை டாஸ்கில் அனல் பறப்பதாக இருந்தது. ஒருவரை யொருவர் முட்டி மோதிக்கொண்டு தள்ளிக் கொண்டனர். வார்த்தைகளால் அர்ச்சனைகளை வீசியதுடன் மட்டுமல்லாமல் கைகளால் தள்ளி அடித்துக்கொண்டனர். இது ரசிகர்களுக்கு நல்ல விருந்தாகவும் விறுவிறுப்பாகவும் இருந்த நிலையில், வார இறுதியில் வீட்டுக்கு வந்த கமல், போட்டியாளர்களை விளாசித் தள்ளினார்.
குறும்படம் உறுதி
பொம்மை டாஸ்க்கின் போதே ஷெரினாவை யார் தள்ளிவிட்டது என்பதில்தான் சண்டையே தொடங்கியது. அப்போது அங்கிருந்த அசீம், 'தனலட்சுமி தான் ஷெரினாவை தள்ளிவிட்டார் என்று குற்றம்சாட்டியதுடன், நீயெல்லாம் ஒரு பொண்ணா என்று கடுமையாக விமர்சனம் செய்து தனலட்சுமியை திட்டினார். இதையடுத்து கமல் குறும்படம் போட்டு, தனலட்சுமி தள்ளிவிடவில்லை என்று கூறியதோடு அவரை பாராட்டினார்.
செவுள்ல அடி வாங்கும்
கமல் பாராட்டிவிட்டார் என்பதால் தலைக்கனம் ஏறிப்போன தனலட்சுமி தொடர்ந்து வீட்டில் இருப்பவர்களிடம் திமிராக நடந்து கொள்கிறார். அந்தவகையில், ஏடிகே ராபர்ட் மாஸ்டரிடம் உட்கார்ந்து உரையாடி கொண்டிருந்தார். அப்போது, தனலட்சுமி பற்றி பேச துவங்கிய ஏடிகே, தனலட்சுமி இந்த வீட்டில், இருப்பவர்களிலேயே அதுதான் ரொம்ப ரொம்ப மோசம். யாரையும் மதிக்க மாட்டேங்குது. எவனாவது முடியை பிடித்து செவுள் மீது அடிப்பான். அப்போதுதான் அது திருந்தும் என்று கோபமாக பேசியுள்ளார்.
bigg boss 6 dhanalakshmi
ஓவர் திமிரு உடம்புக்கு ஆவாதும்மா
இதே போலத்தான் பிக் பாஸ் ரசிகர்களும் தனலட்சுமியை விமர்சனம் செய்து வருகின்றனர். கமல் பாராட்டியதால், ஓவர் திமிரா நடந்துக்குறாங்க. கமல், தனலட்சுமியை பாராட்டி இருக்கக்கூடாது. பாராட்டியதால், என்னமா ஹெட் வெயிட் காட்டுது. ஓவரா சீன் போடுது. ஒரு டேஞ்சர் ஜோனில் மாட்டணும் , இல்ல எலிமினேஷனில் சிக்கி வெளியே வந்தாதான் இந்த தனலட்சுமி பொண்ணு அடங்கும் என்று ரசிகர்கள் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.
இன்னும் என்னென்ன பிக் பாஸ் வீட்டுக்குள் நடக்கப்போகிறதோ என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள். அவர்களுக்கு கொண்டாட்டம்தான். யார் உள்ளே இருந்தால் என்ன? போனால் என்ன? பொழுது போக பிக் பாஸ் என்று கொண்டாடிவருகின்றனர் ரசிகர்கள்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu