நவம்பர் மாதத்திற்கு தள்ளிப் போகும் பிக்பாஸ் நிகழ்ச்சி
Bigg Boss Tamil Season 6 Contestants -விஜய் டிவியின் முக்கியமான மற்றும் முன்னணி நிகழ்ச்சியாக பிக் பாஸ் நிகழ்ச்சி திகழ்கிறது. இந்த நிகழ்ச்சி முதல் சீசனிலிருந்தே ரசிகர்களை கட்டிப் போட்டு வருகிறது. இந்த நிகழ்ச்சி பின்னிரவு துவங்கப்பட்டாலும் இந்த நிகழ்ச்சியை காத்திருந்து பார்த்துவிட்டுதான் தூங்கப் போவார்கள். அந்த அளவிற்கு ரசிகர்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பை பெற்றுள்ளது.
இதுவரை இந்த நிகழ்ச்சியின் முதல் 5 சீசன்கள் நிறைவடைந்துள்ளது. அனைத்து சீசன்களையும் கமல்ஹாசன்தான் தொகுத்து வழங்கினார். தொடர்ந்து பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியும் துவங்கப்பட்டது. ஆனால் இந்த நிகழ்ச்சியின் பாதியிலேயே கமல் விலக, சிம்பு இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து தொகுத்து வழங்கினார். பிக்பாஸ் அளவிற்கு பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி ரசிகர்களை அதிகமாக கவரவில்லை என்றாலும், பல சிறப்பான அம்சங்களை நிகழ்ச்சியின் போட்டியாளர்கள் அரங்கேற்றினர்.
இந்நிலையில் அடுத்ததாக விஜய் டிவியில் பிக்பாஸ் சீசன் 6 துவங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சீசனையும் நடிகர் கமல்ஹாசனே தொகுத்து வழங்க உள்ளார். நிகழ்ச்சியின் போட்டியாளர்கள் குறித்த தகவல்கள் அடுத்தடுத்து வெளியாகி வருகின்றன. குக் வித் கோமாளி தர்ஷன் உள்ளிட்டவர்கள் இந்த லிஸ்ட்டில் உள்ளனர்.
இவ்வாறு நிகழ்ச்சியில் பங்குபெறும் போட்டியாளர்களை தேர்ந்தெடுத்து வரும்நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சி தள்ளிப் போவதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆனால் தமிழ் பிக்பாஸ் இல்லை. மாறாக இந்தியில் சல்மான்கான் தொகுத்து வழங்கிவரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 16வது சீசன்தான் தற்போது தள்ளிப் போகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழை போலவே இந்தியிலும் இந்த நிகழ்ச்சி விரைவில் துவங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால், கத்ரன் கி கில்லாடி 12 மற்றும் ஜலக் திக்லா ஜா ஆகிய ஷோக்களால் பிக் பாஸ் 16 ஷோ தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பிக்பாஸ் 16 நிகழ்ச்சி எப்போது துவங்கும் என்பது குறித்து அதிகாரப்பூர்வ தகவலுக்காக ரசிகர்கள் காத்துள்ளனர். இந்தத் தொடர் நவம்பர் மாதத்திற்கு தள்ளிப் போக வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu