பாக்கியலட்சுமியின் அதிரடி: டி.ஆர்.பி. ரேட்டிங்கில் முதலிடத்தை தவறவிட்ட சன்டிவி

பாக்கியலட்சுமியின் அதிரடி: டி.ஆர்.பி. ரேட்டிங்கில் முதலிடத்தை தவறவிட்ட சன்டிவி
X

டி.ஆர்.பி. ரேட்டிங்கில் கயல் சீரியலை பின்னுக்குத் தள்ளிய பாக்கியலட்சுமி

கோபியின் கள்ளக்காதலி யார் என்பதை தெரிந்து கொண்ட பாக்யா எரிமலையாக வெடித்த நிகழ்வு, சன் டிவியின் ‘கயல்’ சீரியலை இரண்டாமிடத்திற்கு தள்ளியுள்ளது

கோபியின் கள்ளக்காதலி ராதிகா தான் என்பதை தெரிந்து கொண்ட பாக்யா, எரிமலையாக வெடித்த நிகழ்வு, சன் டிவியின் 'கயல்' சீரியலை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது.

டிவி சேனல்களில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களை பார்ப்பவர்களின் எண்ணிக்கையை கொண்டு டி.ஆர்.பி. ரேட்டிங் லிஸ்ட் உருவாக்கப்பட்டு வருகிறது. இந்த டிஆர்பி ரேட்டிங்கில், சன் டிவி தான் தொடர்ந்து முன்னிலையில் இருந்து வந்தது. இந்நிலையில், இந்த வாரத்திற்கான டிஆர்பி ரேட்டிங்கில் முதலிடத்தை தக்க வைத்துக் கொண்டிருந்த சன் டிவியின் 'கயல்' சீரியல் தற்போது இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்டு உள்ளது.

அப்போ முதலிடம் யாருக்குன்னு யோசிக்கிறீங்களா? வேற யாருக்கு நம்ம 'பாக்கியலட்சுமி'க்குத் தான்.


தனது கணவர் கோபியின் கள்ளக்காதலி ராதிகா என்பதை அறிந்த பாக்கியா, எடுத்த அதிரடி நடவடிக்கைகள், பார்வையாளர்களை மிகவும் கவர்ந்ததால், அந்த சீரியல், தற்போது டிஆர்பி ரேட்டிங்கில் முதலிடத்திற்கு முன்னேறி உள்ளது. இதன் காரணமாக, முதலிடத்தில் இருந்த 'கயல்' சீரியல், இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டு உள்ளது.

டி.ஆர்.பி. ரேட்டிங் லிஸ்டின் மூன்றாவது மற்றும் நான்காவது இடங்களில் எவ்வித மாற்றமும் இல்லை. சன் டிவியில் ஒளிபரப்பாகும் 'வானத்தைப் போல' சீரியல் மூன்றாவது இடத்திலும், நான்காவது இடத்தில் 'சுந்தரி' சீரியலும் உள்ளது.

ஐந்தாவது இடத்தில் 'ரோஜா' சீரியலும், ஆறாவது இடத்தில் 'கண்ணான கண்ணே' சீரியலும் உள்ளது.

'சறுக்கிய' பாண்டியன் ஸ்டோர்ஸ்

டி.ஆர்.பி. ரேட்டிங்கில் முதல் 5 இடங்களில் நீடித்து வந்த 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' சீரியலின் கதைப்போக்கு, பார்வையாளர்களுக்கு தொடர்ந்து சலிப்பை ஏற்படுத்துவதாக உள்ள நிலையில், அந்த சீரியல், தற்போது 7வது இடத்திற்கு தள்ளப்பட்டு உள்ளது.

8வது இடத்தில், விஜய் டிவியின் 'பாரதி கண்ணம்மா'வும், 9வது இடத்தில், சன் டிவியில் ஒளிபரப்பாகும் 'எதிர்நீச்சல்' சீரியலும் உள்ளது.

'எதிர்நீச்சல்' சீரியல், தற்போது தான் துவங்கப்பட்டு இருந்தாலும், 4 அக்கா – தங்கைகளின் போராட்டமான வாழ்க்கை குறித்த காட்சிகள், ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று உள்ளன.

டி.ஆர்.பி. ரேட்டிங் லிஸ்டின் 10வது இடத்தை விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் 'தமிழும் சரஸ்வதியும்' சீரியல் பிடித்துள்ளது.

சுவாரசியமான அதிரடி திருப்பங்கள் கொண்ட காட்சி நகர்வுகளையே, ரசிகர்கள் விரும்புவதை, இந்த வார டி.ஆர்.பி. ரேட்டிங் லிஸ்ட் வெட்ட வெளிச்சமாக்கி உள்ளது.

Tags

Next Story