'பீஸ்ட்' ஆங்கில வார்த்தைக்கு அர்த்தம் என்ன ? தெரிஞ்சிக்குவோமா..?
beast tamil meaning-பீஸ்ட் பட போஸ்டர் (கோப்பு படம்)
Beast Meaning in Tamil-Beast (பீஸ்ட்) என்பதற்கு மிருகத்தனமான இயல்புடைய குணம் கொண்ட மனிதன் என்று சொல்லலாம் அல்லது கொடூர விலங்கு என்றும் சொல்லலாம். கொடுமையான எதற்கும் அஞ்சாத குணம் உடைய என்றும் சொல்லலாம்.
நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வெளியான ஆக்ஷன் படம் பீஸ்ட். இந்த படத்தை Sun Pictures நிறுவனம் தயாரித்து வெளியிட்டது. 2022ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 13ம் தேதி இந்த படம் வெளியானது. இந்த படத்துக்கான பட்ஜெட் ரூ.150கோடி. Box Office கணக்குப்படி தோராயமாக ரூ.236 கோடி முதல் ரூ.250 கோடிகள் வரை வருவாய் ஈட்டியதாக தெரிகிறது.
நடிகர் விஜய்யுடன் பூஜா ஹெக்டே, செல்வராகவன் ஆகியோர் நடித்திருந்தனர். மாஸ்டர் படத்தை தொடர்ந்து நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் விஜய் நடித்த படம் பீஸ்ட். இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடித்து இருந்தார். இதன் முதற்கட்ட படப்பிடிப்புகள் ஜார்ஜியா நாட்டின் பல பகுதிகளில் நடைபெற்றது. படத்தின் எதிர்பார்ப்பும் ரசிகர்களிடம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்த படம் வெளியாகி நல்ல பெயரைப்பெற்றது.
'தளபதி 65' என்று அழைக்கப்பட்டு வந்த இப்படத்துக்கு 'பீஸ்ட்' என பெயரிடப்பட்டது. இதன் மூலம் விஜய்யின் திரைப்படத்துக்கு நேரடி ஆங்கில வார்த்தை தலைப்பாக வைக்கப்பட்டது. இந்த படத்துக்கு முன்னரும் விஜய் படத்துக்கு ஆங்கில வார்த்தையில் பெயர் வைக்கப்பட்டுள்ளது.
பீஸ்ட் என்ற ஆங்கிலச் சொல்லிற்கு அசுரத்தனமான பெரிய மிருகம் என பொருள் தரும். அதேவேளை எந்த ஒருவராலும் கட்டுப்படுத்த முடியாத ஒருவரை வழக்கமாக பீஸ்ட் என அழைப்பது வழக்கம். உதாரணமாக குத்துச் சண்டையில் கட்டுப்படுத்த முடியாத வீரராக இருப்பவர்களை பீஸ்ட் என்பார்கள்.
தமிழில் விஜய்யின் பீஸ்ட் என்ற இந்த படத்தலைப்பு வித்தியாசமாக இருப்பதாக ரசிகர்கள் கொண்டாடினார்கள். இதற்கு முன்னர் விஜய் லவ் டுடே, ஒன்ஸ்மோர், ஃபிரண்ட்ஸ், யூத், மாஸ்டர் போன்ற படங்களின் தலைப்புக்கள் ஆங்கிலத்தில் இருந்தன. இது மட்டுமல்லாமல் கில்லி, பிகில் என வட்டார வழக்கு சொற்களையும் தலைப்பாக வைத்து நடித்துள்ளார்.
விஜய்யின் இந்த திரைப்படத்திற்கு தொடக்கத்தில் 'டார்கெட்' என பெயர் வைக்கப்பபோவதாக ரசிகர்கள் மத்தியில் தகவல் பரவியது. ஆனால் அதை பொய்யாக்கி பீஸ்ட் என்ற பெயர் வைக்கப்பட்டது. இந்த பெயரை படக்குழுவினர் மிகவும் ரகசியமாக வைத்து வெளியிட்டனர் என்பது கூடுதல் தகவலாகும்.
Beast என்பதற்கு ஆங்கிலத்தில் உள்ள பொருள் மற்றும் அந்த வார்த்தையை எப்படி பயன்படுத்தலாம் என்பதும் தந்துள்ளோம்.
beast used as a verb:
to impose arduous exercises, either as training or as punishment.
She turned away, seeking to suppress the beast, and grabbed her sword.
beast used as a noun:
The beast was very close to him now.
Any animal other than a human; usually only applied to land vertebrates.
A person who behaves in a violent, antisocial or uncivilized manner.
A large and impressive ஆட்டோமொபைல்
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu