கோபிசெட்டிபாளையத்தில் 'பீஸ்ட்' சினிமா முன்பதிவு: ரசிகர்கள் உற்சாகம்

கோபிசெட்டிபாளையத்தில் பீஸ்ட் சினிமா முன்பதிவு: ரசிகர்கள் உற்சாகம்
X

பீஸ்ட் டிக்கெட் முன்பதிவு ஆன்லைனில் தொடங்கியதை படத்தில் காணலாம்.

கோபிசெட்டிபாளையத்தில் உள்ள 3 திரையரங்குகளில் நடிகர் விஜய் நடிக்கும் பீஸ்ட் திரைப்படத்திற்கு தியேட்டர் முன்பதிவு துவங்கியுள்ளது

நடிகர் விஜய் தற்போது, தனது 65-வது படமான 'பீஸ்ட்' படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தத் திரைப்படத்தை இயக்குநர் நெல்சன் திலீப் குமார் இயக்கியுள்ளார். படத்தில் கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். அனிருத் இசையமைக்கும் இப்படத்தில் அபர்ணா தாஸ், யோகிபாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

விஜய்யின் 'சர்கார்' படத்தைத் தொடர்ந்து, இந்தப் படத்தையும் சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. படத்தின் பாடல்களும், ட்ரைலரும் வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. படம் வரும் 13-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் உள்ள 3 திரையரங்குகளில், படத்திற்கான டிக்கெட் புக்கிங் நேற்று தொடங்கியது. கோபி ஜெயமாருதி , சிறுவலூர் காஸ்மோ சினிமா மற்றும் கொளப்பலூர் காஸ்மோ சினிமா ஆகிய மூன்று திரையரங்குகளில், தற்போது ஆன்லைன் டிக்கெட் புக்கிங் நடைபெற்று வருகிறது.இதனால், விஜய் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் இந்த படத்திற்கு காத்துகொண்டு இருக்கிறார்கள்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!